சிறார் இலக்கிய சந்திப்பு
திருச்சிராப்பள்ளி தமிழ் இலக்கியக் கழகம் வாசகர் வட்டம் நடத்திய இலக்கியச் சந்திப்பு நிகழ்வு செயின்ட் ஜேம்ஸ் அகாடமி அருகில் உள்ள தமிழ் இலக்கிய கழகம் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இளம் எழுத்தாளரும் கதை சொல்லியுமான க. சாய் மகஸ்ரீ ( ஆறாம் வகுப்பு) மாணவி விஞ்ஞானி த. வி.வெங்கடேஷ்வரன் அவர்கள் எழுதிய சூரியனும் கோள்களும் நூலைக் குறித்து ஆழமான விமர்சன உரை வழங்கினார். அறிவியல் சார்ந்த இந்நூல் விமர்சனம் வானியல் சார்ந்த ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்தது. மாணவி பொ.ஸ்சாஷித்தா மூன்றாம் வகுப்பு மாணவி எழுத்தாளர் கார்த்திகா கவின் குமார் அவர்களின் அதிசய யூனிகார்ன் நூல் குறித்தும், கலைஞர் எழுதிய புறநானூற்று வீரத்தாயின் உரை வரிகளையும் மிகச் சிறப்பாகக் கூறினார். எழுத்தாளரும் கதை சொல்லியுமான ஹாசினி பேரலை ஆறாம் வகுப்பு மாணவி இளம் எழுத்தாளரும் கதை சொல்லியுமான க. சாய் மகஸ்ரீயின் தங்கப்பெண் சொன்ன கதை சிறார் நூல் குறித்து விமர்சனம் செய்தார். இளம் கதைசொல்லி க. சஷ்டிகா ஸ்ரீ ( மூன்றாம் வகுப்பு) எழுத்தாளர் கிரண் கஸ்தூரியா அவர்கள் எழுதிய சிவப்பு மழைக்கோட் நூல் குறித்து விமர்சனம் செய்தார்.
மேலும் சட்டக் கல்லூரி மாணவர் கவிஞர் ஹரிஹரன் வீரப்பன் எழுதிய என் பார்வையில் நூல் விமர்சனத்தை திருச்சி இதயம் கல்வியியல் கல்லூரி மாணவர் ஏ.கிருபாகணேஷ் மற்றும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர் கா. தாமோதரன் ஆகியோர் திறனாய்வுரை வழங்கினர். நிகழ்வின் இறுதியில் பள்ளி மாணவன் ராஜா பாடல் பாடினார்.
நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியக் கழகத்தின் இயக்குநர்அருள்தந்தை விக்டர் ஜெயபாலன் அவர்கள் நிகழ்வில் தலைமை வகித்தார்.
நிகழ்வினை கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியர் சதீஸ்குமார் (எ) ஆநிறைச் செல்வன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் எழுத்தாளர் கார்த்திகா கவின் குமார், லயன் தேவிகா, பேராசிரியர் சலேத், பேராசிரியர் ஜனார்த்தலி, தமிழ் இலக்கிய கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் லியோ, பத்திரிகையாளர் சந்திரமோகன் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கார்த்திகா கவின்குமார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.