அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பழனி திருக்கோயிலில் மயங்கி விழுந்தார்களா பக்தர்கள் ? பின்னணி என்ன ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு என்ற பெருமை பெற்றது. மேலும், போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண மூலவர் சிலைக்காகவும், பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்தத்திற்காகவும் உலகப் புகழ் பெற்ற திருக்கோயிலாகவும் விளங்கிவருகிறது.
இந்நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ள இத்திருக்கோயிலில், பக்தர்களுக்கான வசதி குறைபாடுகள் இருப்பதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறது, திருக்கோயில் நிர்வாகம்.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், “ பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மலைக்கோயில் பிரகாரங்கள், க்யூ லைன்கள், படிப்பாதை, யானைப்பாதை மற்றும் கிரிவீதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சேர்த்து மொத்தம் 369 குழாய்கள் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. தேவையான அளவில் காத்திருப்பு கூடங்கள் மற்றும் க்யூ லைன்களுக்கு நிழல் குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 26.06.2026 அன்று 5 நபர்கள் மயங்கி விழுந்ததாகவும் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர், நிழற்பந்தல் மற்றும் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லையென்றும் மயங்கி விழுந்த பக்தர்களுக்கு திருக்கோயில் மூலம் உதவிகள் செய்யவில்லையென்றும் பொய்யான தகவலை திட்டமிட்டு ஜோடித்து News தமிழ் 24 x 7 தொலைக்காட்சி நிருபர் பாலாஜி என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 110 பேருக்கு  அனுமதிமேலும், காணொலியில் காட்டப்பட்ட பக்தருக்கு குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக, தலைச்சுற்றல் ஏற்பட்டு ரூ.100/- சிறப்பு வழிக்கு வரும்போதே கீழே அமர்ந்துவிட்டார். தகவல் கிடைத்தவுடன் திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து சரிசெய்த பின்பு மலைக்கோயில் முதலுதவி மையத்திற்கு மின்கல வாகனத்தில் அழைத்து சென்று சிகிச்சை அளித்து இரத்த அழுத்தம் சீரானவுடன் மேல்சிசிக்சைக்காக திருக்கோயில் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது உடல் நலம் சரியாகி வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்றைய தினம் இவர் ஒருவருக்கு மட்டுமே அவருடைய உடல்நிலை குறைபாடால் தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. வேறு எந்த பக்தரும் மயக்கமடையவில்லை.
X News தமிழ் 24 7 நிருபர் பாலாஜி என்பவர் வேண்டுமென்றே திருக்கோயிலின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்ப வேண்டுமென்ற கெட்ட உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்பி இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தவும், திருக்கோயில் நிர்வாகத்திற்கும். தமிழ்நாடு அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற தீய உள்நோக்கத்துடனும் செயல்பட்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இத்திருக்கோயிலில், பக்தர்களுக்கு பல்வேறு கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 அண்டுகளில் சுமார் ரூ.144 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வளவு விரிவான கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டும் மேற்படி News தமிழ் 24 x 7 தொலைக்காட்சி சேனலில் பழனி திருக்கோயிலில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என முற்றிலும் பொய்யான தகவலை மக்களுக்கு பரப்பியுள்ளனர். ஏற்கனவே மேற்படி நிருபர் மீது அவதூறு செய்திகள் பரப்பியதற்காக காவல்துறையில் புகார்கள் கொடுக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. தற்போது இந்த அவதூறு செய்தி பரப்பியதற்காகவும் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.
மலைக்கோயில், யானைப்பாதை, படிப்பாதை மற்றும் கிரிவீதியில் உள்ள மொத்த SS Sinkகளின் எண்ணிக்கை 172. அவற்றில் உள்ள குழாய் இணைப்புகள் மொத்தம் 342 ஆகும். 500 லிட்டர் எஸ் எஸ் டேங்க் 2, 250 லிட்டர் எஸ் எஸ் டேங்க் 9, 500 லிட்டர் பிவிசி டேங்க் 12 மற்றும் வாட்டர் டாக்டர் 4 ஆக மொத்தம் 369 குழாய்கள் மூலம் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. தக்காளி சாதம் நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. பஞ்சாமிர்தம் பிரசாதம் தொன்னையில் நாள் முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. 38 பேட்டரி பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகிறது. நீர்மோர் நாள் முழுவதும் வழங்கப்படுகிறது. இதுபோன்று பல்வேறு கட்டணமில்லா சேவைகள் திருக்கோயில் நிர்வாகம் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.”
”அன்னதானம், முடிகாணிக்கை செலுத்துதல், முதலுதவி சிகிச்சை மருத்துவமனை, கிரிவீதியில் உள்ள பக்தர்களுக்கு இலவச பொட்டலம் சாதம், நீர்மோர், நாள் முழுவதும் பிரசாத திட்டம் (பஞ்சாமிர்தம்), சுக்கு காபி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ – மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி, சித்த மருத்துவமனை, மனநலகாப்பகம், கிரிவீதியில் மின்கல பேருந்து வசதி, கைக்குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவு, நாள்முழுவதும் பிரசாதம் (கலவை சாதம்), இலவச திருமணம், தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதியருக்கு சிறப்பு, மாற்றுதிறனாளிகள் இலவச ரோப்கார். வின்ச் தரிசனம், காலணி பாதுகாப்பகம், கழிப்பறைகள் மற்றும் குளியல் அறைகள், வாகன நிறுத்துமிடம் என ஆண்டு முழுவதும் வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் இந்த சேவை கட்டணமில்லாமல் கிடைக்கிறது. ஆண்டொன்றுக்கு சுமார் 143 கோடி ரூபாய் அளவுக்கு பக்தர்களின் சேவைக்காகவே செலவிடப்பட்டு வருகிறது.
எனவே, பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகம் மூலம் ஏராளமான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் இது போன்ற தவறான செய்திகளை நம்பி அச்சம் கொள்ள வேண்டாம் என திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்பதாக விரிவான விளக்கத்தை வழங்கியிருக்கிறது, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம்.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.