தொடரும் கஞ்சா விற்பனைகள் ! அதிரடி வேட்டையில் திருச்சி காவல்துறை !
திருச்சி மாநகரில் போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் மற்றும் வாலிபர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மாநகரம் முழுவதும் நேற்று அதிரடி போதை மாத்திரை வேட்டை நடந்தது.
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி அரியமங்கலம் அருகே போதை மாத்திரை பயன்பாடு உள்ளதாக அரியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர் அப்போது போதை மாத்திரை வைத்திருந்த திருச்சி அரியமங்கலம் சவுக்கத் அலி நகரை சேர்ந்த ஷானவாஸ் ஹுசைன் 24 என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் ஒரு மருத்துவ ஊசி ஒரு வாட்டர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் 20 , அரவிந்த் குமார் 21 ஆகிய இரண்டு வாலிபர்களை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அவர்களிடமிருந்து 10 போதை மாத்திரை கள், இரண்டு மருத்துவ ஊசி, பாட்டில், பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மதுரை சாலை ராமகிருஷ்ணா பாலம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த பெரிய கடைவீதி பெரிய கம்மாளர் தெருவை சேர்ந்த செந்தில்குமார் 28 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மருத்துவ ஊசி பறிமுதல் செய்யப்பட்டது.
காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை அருகே போதை மாத்திரை விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவபிரசாத் 24 என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து எட்டு போதை மாத்திரைகள் 4 மருத்துவ ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி வாழைக்காய் மண்டி கிருஷ்ணாபுரம் சாலை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த தாராநல்லூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் 26 மேல தேவதானம் பகுதியை சேர்ந்த மதன்குமார் 25 ஆகிய இரு வாலிபர்களை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 245 போதை மாத்திரைகள் நான்கு மருத்துவ ஊசிகள் இரண்டு வாட்டர் பாட்டில்கள் மற்றும் ஒரு அருவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தினர் அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி நந்தினி 51 என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பர்முதல் செய்யப்பட்டது.
இதேபோன்று திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை தீரன் நகர் அருகே கஞ்சா விற்ற அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் 28 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்ந்து அவரை ஜாமினில் விடுவித்தனர்.
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை நடத்தி புகையிலை விற்றவர்களை கைது செய்தனர்.
திருச்சி கோரை ஆறு அருகே புகையிலை விற்ற திருச்சி பெரிய மிளகுபாறை புதுத் தெருவை சேர்ந்த மனோகரன் (வயது 42 ) என்பவரை கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 10 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி குட்டிமலை சாலை அருகே புகையிலை விற்ற கிராப்பட்டி பாரதிநகரை சேர்ந்த ஆறுமுகா கனி 39 என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர் .அவரிடம் இருந்து 40 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று பொன்மலை அஞ்சல் அலுவலக சாலை அருகே புகையிலைப் பொருட்கள் விற்ற பொன்மலைப்பட்டி மலையடிவாரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் 24 என்ற வாலிபரை பொன்மலை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 100 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.