அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விடுதலை சிறுத்தை கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நடைபெற உள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் – மாவட்ட, மாநில, மண்டல நிர்வாகிகள் பங்கேற்பு.

ஆகஸ்ட் 17அன்று நடைபெற உள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான திருச்சி, கரூர், திண்டுக்கல், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைசெல்வன் அவர்கள் தலைமையில், அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன் அவர்கள் முன்னிலையில் பழைய மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இக்கூட்டத்தில் ஆகஸ்ட்  17ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர், தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளையொட்டி நடைபெற உள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும்,  வருகின்ற ஜூலை 15ஆம் தேதி திருச்சியில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள மண்டல அளவிலான ஆலோசனை கூட்டங்கள் குறித்ததான ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், மாநில மற்றும் மண்டல செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.