அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முதுகு சொறியவா, திராவிட இயக்கப் போர்வாள் ?

திறந்த மடல் – 26

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

“திராவிட இயக்கப் போர்வாள்” வைகோ அவர்களுக்கு, வணக்கம்.
காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைந்திருந்த அவையில், “மிஸ்டர் ராஜீவ் காந்தி எங்கே ஓடுகிறீர்கள்? என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு அவையைவிட்டு வெளியேறுங்கள்…” எனக் கருப்புத்துண்டை தோளில் முறுக்கிக் கொண்டு கர்ஜித்த காலம்… நாடாளுமன்றத்தின் வைகோவின் காலமாக மிளிர்ந்தது… ஒளிர்ந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியது… உலக நாடுகளிடம் ஈழவிடுதலையின் தேவை குறித்து உரையாற்றியது… அதற்காக பொடா சட்டத்தில் வேலூரில் சிறைப்படுத்தப்பட்டிருந்தது என்ற வீரமிக்க வரலாறு எந்த அரசியல் தலைவருக்கும் கிடைக்காது.
30 ஆண்டு காலம் ஆற்றல்மிக்க சொல்வளத்தால் 7 பிரதமர்களை அலறவிட்டவர். தன் மகன் போன்றவர் வைகோ என்று அன்றைய பிரதமர்கள் இந்திராகாந்தியும் வாஜ்பாயும் சொல்லும் அளவுக்கு அன்பையும் பெற்றவர் நீங்கள்.

வைகோ
வைகோ

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

1978 இல் திருச்சியில் திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு மாநில மாநாட்டைத் திறந்து வைத்து நீங்கள் ஆற்றிய உரை, கழகத்தை நோக்கி இளைஞர்களை காந்தமாய் ஈர்த்தது. 1993 இல் திமுகவிலிருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டபோது, உங்களோடு 9 மாவட்டச் செயலாளர்கள், 40% பொதுக்குழு உறுப்பினர்கள், இலட்சக்கணக்கான தொண்டர்களை பின்னிழுத்தும் சென்றது.
1994 இல் மதிமுக எனும் அரசியல் இயக்கம் கண்டு, 1996 இல் பெருந்துறை சட்டமன்ற இடைத்தேர்தலில் தொடங்கியது தேர்தல் அரசியல் பயணம். 1996 இல் திமுகவுடன் கூட்டணி. 1998 இல் அதிமுகவோடு மக்களவைத் தேர்தல் கூட்டணி. 2001 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி. 2004 இல் திமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி. 2006 இல் அதிமுகவோடு கூட்டணி. 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக குறைவான தொகுதியை ஒதுக்கியதால், தேர்தலைப் புறக்கணிப்பு என்ற தற்கொலை முடிவு. 2016 இல் மக்கள் நலக் கூட்டணி.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக பக்கம் சாய்ந்து, மாநிலங்களவை பதவி. 2024 இல் உங்களது மகனுக்கு எம்.பி. பதவி என இந்த கூட்டணி, 2026 சட்டமன்றத் தேர்தல் வரை தொடர்ந்தது, அரசியல் அதிசயம்தான். ஆனாலும், மேடைகளில் நரம்பு புடைக்க முழங்கும் கொள்கையின்பால் உங்களது அரசியல் பயணம் எப்போதும் இருந்ததில்லை என்பதை தமிழகம் நன்கறியும்.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

துரை வைகோ
துரை வைகோ

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

என் மகன் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார் என்று சத்தியம் செய்து முழக்கமிட்ட நீங்கள்தான், 2020 கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசியல் அரிச்சுவடி அரியாத துரை வையாபுரியை வலுக்கட்டாயமாக கட்சிக்குள் நுழைத்தீர்கள். துரை வையாபுரி, துரை வைகோ ஆனார். அதுவரை போர்ப்படைத்தளபதியாக, 30 ஆண்டு காலம் நிழலாய் உடன் பயணித்த பட்டியலினத்தை சேர்ந்த துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை சமயம் பார்த்து கழட்டிவிடவும் துணிந்தீர்கள்.
கூட்டணி கட்சி மேடையில் சொந்தக்கட்சியின் சின்னத்துக்காக கதறி அழுததாகட்டும்; பாஜகவுடன் கூட்டணி அமைக்க பெரும்பாடுபட்டதாகட்டும் உங்களையே விஞ்சி பதினாறு அடி பாய்ந்துவிட்டார், துரைவைகோ.
இந்த பின்புலத்தில்தான், உங்களோடு திமுக கூட்டணியில் இருந்த சிபிஎம், சிபிஐ, விசிக, முஸ்லீம் லீக் கட்சிகள் எல்லாம் பசையுள்ள தவெக பக்கம் சாய்ந்துவிட, சொந்த சின்னத்தில் போட்டியிடாமல் போனதால், மந்திரியாக முடியவில்லையே என்ற புழுக்கத்தில் தவித்தீர்கள்.
மரியாதை நிமித்தமாக முதல்வர் ஜோசப் விஜயை நீங்கள் சந்தித்து, இதுவரை கண்டிராத அதிசயத்தை கண்டு பேரானந்தபட்ட ஜீவனாய் உங்களுக்கே உரிய உணர்ச்சிப்பெருக்கோடு ஆரத்தழுவியபோதே தெரிந்துவிட்டது, அடுத்து என்ன நடக்கப்போகிறதென்று. சிறப்பான ஆட்சியென்ற புகழாரம் முதலில் வந்தது. பின்னர், பொதுக்குழு முடிவு எனும் பூனைக்குட்டியும் வெளியில் வந்தது.
வைகோவின் வீட்டிற்குச் சென்ற முதல்வர் விஜய் : சிரித்த முகத்துடன் உற்சாகமாக  கையசைத்த வைகோ!”இடைத்தேர்தலில் நானே பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைக்கிறேன்” என்ற வாக்குறுதியோடு நிறுத்தியிருந்தால்கூட பரவாயில்லை; “சுயமரியாதை, தன்மானம் இழந்துதான் திமுக கூட்டணியில் 9 ஆண்டுகள் இருந்தேன்” என்ற உங்களது ஒப்புதல் வாக்குமூலம், ப(ச்)சையாய் ”மகனுக்காக இதையெல்லாம் சகித்துக் கொண்டு இருந்தேன்” என்பதாகத்தான் எங்களுக்கெல்லாம் எதிரொலித்தது.
”திராவிடம்கொள்கை குறித்து இதுவரை நீங்கள் பேசியது எல்லாம் பொய்யா கோபால்….. பொய்யா… கோபால்”என்றே எள்ளிநகையாடி வலம் வரும் குரல் இன்னும் உங்கள் காதில் எட்டவில்லையா?
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவரும் ராஜினாமா செய்ய மறுத்து கட்சியின் முடிவை மீறியபோது சிவந்த உங்கள் கண்கள், அதே சின்னத்தில் போட்டியிட்டு இன்னமும் கெட்டியாய் பிடித்துக்கொண்டிருக்கும் உங்கள் மகனை நோக்கி இம்மியளவும் திரும்பாதது தற்செயல்தானா?
யாருக்கு வந்தது பேராபத்து? திராவிடத்தை பாதுகாக்கத்தான் இவ்வளவு பதட்டமடைகிறீர்களா? பத்திரிகையாளர்களிடம் பாய்கிறீர்களா? மகனுக்காக பாகப்பிரிவினை செய்துதர மதிமுக அரசியல் இயக்கமா? இல்லை, உங்கள் பாட்டன் வீட்டு சொத்தா? கடைசியாக ஒன்று, எதற்கு அந்த திராவிட இயக்கப் போர்வாள்? முதுகு சொறிவதற்கா? சொல்லுங்கள், கோபால்!

—  ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.