துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது FIR ?
தீபாவளியன்று துறையூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கார்த்திக் குமார் தாக்கப்பட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அவரைக் கட்டாயப்படுத்தி மறுப்பு வீடியோ வெளியிடச் செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் காவல் ஆய்வாளர் கிருபாநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 10ஆம் தேதி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படாததால், கார்த்திக் குமார் சார்பில் கடந்த 16ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்துப் பேசிய வழக்கறிஞர் பொன் முருகேசன், வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் விசாரணை நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.