தடுப்பு மருத்துவ பராமரிப்பை தினசரி பழக்கங்களில் இணைப்பது ஏன் தெரியுமா ?
இந்தியாவில் மருத்துவச் சிகிச்சை செலவுகள் அதிகரித்து வருவதால் உடல் நலம் மற்றும் நலவாழ்வு தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் அதிக முக்கியத்துவம் பெற்றதாக மாறியுள்ளது. நோய் ஏற்படும்போது சிகிச்சை பெறுவது போலவே ஆரோக்கியமாக இருப்பது முக்கியமானது என்பதை மக்கள் அதிகளவில் அறிந்துள்ளனர். வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள், ஸ்கிரீனிங் பரிசோதனைகள் மற்றும் நலவாழ்வு திட்டங்கள் போன்ற தடுப்பு மருத்துவ பராமரிப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மருத்துவக் காப்பீடு நோய்த்தடுப்பு சிகிச்சைகளை உள்ளடக்கியிருக்க வேண்டுமா என்பது, பொதுவாக எழும் ஒரு கேள்வியாகும். பதில் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தின் வகை மற்றும் காப்பீட்டாளரின் பாலிசி விதிமுறைகளைப் பொறுத்தது. இன்று பல காப்பீட்டு வழங்குநர்கள் தடுப்பு பராமரிப்பு நன்மைகளை உள்ளடக்கிய திட்டங்களை வழங்குகின்றனர். பாலிசிதாரர்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்த ஊக்குவிக்கின்றனர்.
மருத்துவக் காப்பீட்டில் தடுப்பு பராமரிப்பை புரிந்துகொள்ளுதல்
தடுப்பு பராமரிப்பு என்பது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோய்கள் பரவத் தொடங்குவதற்கு முன்னரே நிறுத்தவும் வடிவமைக்கப்பட்ட மருத்துவ சேவைகளைக் குறிக்கிறது. இது ஒரு முன்னெச்சரிக்கை அணுகுமுறை இதன் மூலம் மக்கள் சாத்தியமான உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். இந்த சேவைகள் நோயை தடுப்பது நோய்களை முன்கூட்டியே அடையாளம் காண்பது மற்றும் தற்போதைய அபாயங்களை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான நடவடிக்கைகளை உள்ளடக்குகின்றன.
பொதுவாக தடுப்புசார் மருத்துவப் பராமரிப்பில் வழக்கமான பரிசோதனைகள் உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவை அடங்கும். நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்குப் பொதுவான தடுப்புச் சேவைகள் அவசியமானவை. இரத்த அழுத்தப் பரிசோதனை, கொலஸ்ட்ரால் பரிசோதனை மற்றும் மேமோகிராம் அல்லது கொலோனோஸ்கோபி போன்ற புற்றுநோய் பரிசோதனைகள் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே உடல்நலப் பிரச்சினைகளை கண்டறிய உதவுகின்றன. இதனால் சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியும். தடுப்பூசிகளும் மற்றொரு முக்கிய அம்சமாகும். அவை காய்ச்சல், அம்மை மற்றும் நிமோனியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்குகின்றன. தொற்றுநோய்கள் பரவும் காலங்களில் நோய் தடுப்பில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தடுப்பு மருத்துவ பராமரிப்பில் மருத்துவப்பரிசோதனைகள் மட்டுமல்ல நலவாழ்வு ஆலோசனைகளும் அடங்கும். இது ஊட்டச்சத்து உடற்பயிற்சி மற்றும் மனநல மருத்துவ ஆதரவு மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.
தடுப்பு மருத்துவ பராமரிப்பு காப்பீட்டின் நன்மைகள்
தடுப்பு மருத்துவ பராமரிப்பின் நன்மைகள் தனிநபர் உடல்நலத்தைத் தாண்டியும் பலன்களை வழங்குகின்றன. மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று தீவிர நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதாகும். வழக்கமான கண்காணிப்பும் உடல்நலப் பரிசோதனைகளும், நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கைமுறை தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகின்றன.
அந்த நிலையில் அவற்றைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும், கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் எளிதாக இருக்கும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது இந்த நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. மேலும், பின்னர் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கடுமையான சிக்கல்களையும் தடுக்க உதவுகிறது.
தடுப்பு மருத்துவ பராமரிப்பு குறிப்பிடத்தக்க செலவு சேமிப்பிற்கும் உதவுகிறது. தனிநபர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது பொதுவாக எளிமையான குறைந்த செலவிலான சிகிச்சைகளையும் குறைவான மருத்துவமனை தங்குதலையும் குறிக்கிறது. மருத்துவ அவசரநிலைகளைத் தவிர்ப்பதன் மூலம் மக்கள் காலப்போக்கில் மருத்துவ செலவுகளில் கணிசமாக சேமிக்கலாம்.
பரந்த அளவில் பார்க்கும்போது தடுப்பு மருத்துவ பராமரிப்பு ஒட்டுமொத்த மருத்துவச்செலவுகளைக் குறைக்க உதவுகிறது. அதிகமான மக்கள் தடுப்பு மருத்துவ சேவைகளைப் பயன்படுத்தும்போது பரவலான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
இது மருத்துவ அமைப்புகள் மீதான அழுத்தத்தை குறைக்கிறது. முக்கியமான பராமரிப்பு தேவைகளுக்கான ஆதாரங்களை விடுவிக்கிறது. இது மேலும் ஆரோக்கியமான பணியாளர்களை உருவாக்க உதவுகிறது. அதனால் உற்பத்தித் திறன் அதிகரித்து நோயால் ஏற்படும் வேலைக்கு வராத நிலையும் குறைகிறது. மற்றொரு முக்கிய நன்மை கல்வி மற்றும் விழிப்புணர்வு ஆகும். தடுப்பு மருத்துவ பராமரிப்பு மக்கள் தங்கள் உடல்நலத்தைப்பற்றி மேலும் அறிந்து விழிப்புணர்வுடன் இருக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி அதற்குப் பொறுப்பேற்கவும் ஊக்குவிக்கிறது.
ஊட்டச்சத்து உடல் செயல்பாடு மற்றும் புகைபிடித்தல் அல்லது மது பயன்பாட்டைக் குறைத்தல் போன்ற பழக்கங்கள் பற்றிய வழிகாட்டுதல் நீடித்த நேர்மறையான மாற்றங்களை செய்ய மக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
நாள்பட்ட நோய்களை நிர்வகிப்பதில் தடுப்பு மருத்துவ பராமரிப்பின் பங்கு நீரிழிவு, இதய நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோய்களை நிர்வகிப்பதில் தடுப்பு பராமரிப்பு அவசியமாகும். சிக்கல்களைத் தவிர்க்க மற்றும் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க இந்த நோய்களுக்கு தொடர்ச்சியான கவனம் மற்றும் வழக்கமான கண்காணிப்பு தேவைப்படுகிறது.
தடுப்பு மருத்துவ பராமரிப்பு, ஆரம்பத்திலேயே நோய்களை கண்டறியவும் தொடர்ந்து நிர்வகிக்கவும் தேவையான கருவிகளையும் வளங்களையும் வழங்குகிறது. இதன்மூலம் மக்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. நாள்பட்ட நோய் மேலாண்மை பொதுவாக இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள் போன்றவற்றைக் கண்காணிக்க வழக்கமான உடல்நல பரிசோதனைகளைப் பயன்படுத்துகிறது.
அதேபோல் மருந்துகளைக் கண்காணிக்கவும் பின்தொடர் சந்திப்புகளுக்கான நினைவூட்டல்களைப் பெறவும் சிகிச்சை திட்டங்களைத் தொடர்ந்து பின்பற்றவும் உதவும் மொபைல் செயலிகள் போன்ற டிஜிட்டல் கருவிகளையும் பயன்படுத்துகிறது. இந்தப் பரிசோதனைகள் உடல்நல முன்னேற்றத்தை கண்காணித்து பிரச்சினைகள் தீவிரமடைவதற்கு முன்பே மாற்றங்களை கண்டறிய உதவுகின்றன. வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளும் அதே அளவு முக்கியம். அவை மருத்துவர்கள் தேவைக்கு ஏற்ப சிகிச்சைத் திட்டங்களை மாற்ற உதவுகின்றன. நாள்பட்ட நோய் மேலாண்மையில் தடுப்பு மருத்துவ பராமரிப்பை பயனுள்ளதாக பயன்படுத்த மக்கள் சில முக்கியமான வழிகளை பின்பற்றலாம். உதாரணமாக, உடல்நல நிலையைக் கண்காணிக்கவும் தேவையான மாற்றங்களை நேரத்தில் செய்யவும்இ மருத்துவர்களுடன் வழக்கமான சந்திப்புகளை திட்டமிடலாம். நாள்பட்ட நோய்களை மேலும் மோசமாக்கக்கூடிய நோய்களைத் தடுக்க தடுப்பூசிகளை நேரத்திற்கு ஏற்ப எடுத்துக்கொள்வது முக்கியம். சீரான ஊட்டச்சத்து, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி நீண்டகால உடல்நலத்தை ஆதரிக்கலாம்.
தடுப்பு பராமரிப்புடன் தகவலறிந்து செயல்படுவது கடுமையான மருத்துவ சிக்கல்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மருத்துவ செலவுகளைக் குறைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது. வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள், ஸ்கிரீனிங் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் போன்ற சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் நீண்ட காலத்தில் குறைந்த சவால்களுடன் ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்க முதலீடு செய்கிறார்கள்.
தடுப்பு மருத்துவ பராமரிப்பை தினசரி பழக்கங்களில் இணைப்பது தனிநபர்களுக்கு மட்டுமல்ல முழு சமூகத்திற்கும் நன்மைஅளிக்கிறது. இதனால் நல்ல உடல்நலம் எளிதில் கிடைக்கும் மற்றும் நீடித்ததாக இருக்கும் ஒரு எதிர்காலம் உருவாகிறது. இந்த நன்மைகளை முழுமையாக பெற உங்கள் காப்பீட்டுத் திட்டத்தின் நிபந்தனைகளைக் கவனமாகப் பரிசீலித்து கேள்விகள் கேட்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் முழு மன அமைதியை வழங்கும் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.