அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி – மாகாளிகுடி முத்தீஸ்வரர் கோவில் புணரமைப்பு பணியில் மோசடி – முறைகேடு ! பகீர் பின்னணி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கோவில் திருப்பணிக்கென கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னால் ஒதுக்கிய ரூபாய் ஒரு கோடிக்கும் மேலான நிதியை மறைத்து , திருப்பணியைச் செய்து முடிக்காமல், தற்போது புதிய டெண்டரில்  ஒதுக்கிய பணத்தில் ஆமை வேகத்தில் மீண்டும் கோவில் திருப்பணி நடக்கும்  நிகழ்வைக் கண்டு மனம் வெதும்பி போய் உள்ளனர் பக்தர்களும் உள்ளூர் பொதுமக்களும்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த மாகாளிகுடி கிராமத்தில் உள்ள முத்தீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதும் பழமை வாய்ந்த கோவிலும் ஆகும். இக்கோவிலில் ராமாயண காலத்தில் ராமன், லட்சுமணன் மற்றும் சீதைக்கு உற்ற நண்பனாக விளங்கிய ஜடாயு என்ற கழுகு அவதாரம் இருந்தது.  ராவணன் சீதையை கடத்திச் செல்லும் போது வழியில் தடுத்து நிறுத்தி இராவணனுடன் கடும் போரிட்டபோது ராவணனால் சந்திரகாசம் என்ற வாளால் ஜடாயுவின் சிறகுகள் துண்டிக்கப்பட்டு கீழே விழுந்து உயிருக்கு போராடிய போது அங்கு வந்த ராமபிரானிடம் சீதை கடத்தப்பட்ட விவரத்தை கூறியும் தன்னுடைய நிலையை கூறியஜடாயுதான் முக்தி பெற வேண்டும் என்ற இறுதி ஆசையை ராமபிரானிடம் கூறியதும் ராமர் அங்கு ஒரு சிவலிங்கத்தைபிரதிஷ்டை செய்கிறார். அந்த இடத்தில் ஜடாயு முக்தி அடைகிறார். ஜடாயுவுக்கு முக்தி அளித்ததால் முக்தீஸ்வரர் எனும் திருநாமத்துடன் சுவாமி அருள் பாலிக்கின்றார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

நந்தியும் பலிபீடமும்

முத்தீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினை மாகாளிகுடி கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் வருடம் ஒரு நிர்வாகி என்ற முறையில் நிர்வகித்து வந்த நிலையில் காலப்போக்கில் அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உத்தமர் கோவில் நிர்வாகத்துடன் முத்தீஸ்வரர் கோவில் நிர்வாகத்தையும் சேர்த்து கவனித்து வந்து நிலையில், தற்போது முதன்மைக் கோவிலாக உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அசையும் சொத்து அசையா சொத்து என்ற கணக்கில்   குறைந்த அளவிலான சொத்துக்களே இருந்த நிலையில், அசையா சொத்துக்களான நிலங்கள்  முக்தீஸ்வரர் கோவிலுக்கு அதிகமாக    இருந்ததால், கோவில் பணியாளர்கள் அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளம் உள்ள நடைமுறைகளுக்காக சமயபுரம் மாரியம்மன் கோவிலுடன் இக்கோவில் நிர்வாகத்தையும் இணைத்துள்ளதாக தெரிய வருகிறது.

யாவரும் கேளீர்

ஜடாயு மண்டபத்திற்கான திருப்பணி

மேலும் முக்தீஸ்வரர் கோவிலில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் கும்பாபிஷேகம் செய்வதென முடிவு செய்து அதற்கான திருப்பணி வேலைகளை துவங்கியதாகவும், திருப்பணிக்கென சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேல் அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், கோயில் திருப்பணியை புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் என்ற ஸ்தபதியார் டெண்டர் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. என்ன காரணத்தினாலோ அதனை கிடப்பில் போட்டு , தற்போது ராஜகோபுரம், ஜடாயு மண்டபம், அர்த்தமண்டபம் சுவாமி அம்பாள் விமானம் வசந்த மண்டபம் உள்ளிட்ட திருப்பணிக்காக மீண்டும் சுமார் ஒரு கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2 மாத காலமாக ஆமை வேகத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதில் பக்தர்களுக்கும் உள்ளூர் பொதுமக்களுக்கும் பெரிய அளவிலான சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள ஒரே விஷயம் என்னவென்றால், கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு இதே முக்தீஸ்வரர் கோவிலுக்கு என ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு எவ்வித திருப்பனியும் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது இதே கோவிலுக்கு ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்முன்பு ஒதுக்கிய நிதி எங்கே போனது ? என்ற சந்தேகத்தை வலுவாக ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

அரைகுறையாக நடைபெற்ற திருப்பணி

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

தற்போது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உப கோவிலான இந்த முக்தீஸ்வரர் கோவிலின் திருப்பணியை சிறந்த முறையில் எவ்வித தொய்வும் இன்றி காலதாமதப்படுத்தாமல் உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்த நிலையில், கோவிலின் ராஜகோபுரம் மிகவும் பழுதான நிலையில் இருந்துள்ளது. அதனால் ராஜகோபுரத்தை முழுமையாக அகற்றி , அஸ்திவாரத்தில் இருந்து புதிய ராஜகோபுரம் அமைக்க முன்பு இருந்த இணை ஆணையர்களான தென்னரசு, கல்யாணி , பிரகாஷ் உள்ளிட்டோர் கூறிச் சென்ற நிலையில்,தற்போது உள்ள இணை ஆணையரான சூரியநாராயணன் என்பவரும் கோவில் திருப்பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் எவ்வித கருத்துக்களையும் காதில் வாங்காமல் தனது இஷ்டம்போல் பணி ஓய்வு பெற்ற தனியார் உதவி கோட்டப் பொறியாளரை கையில் வைத்துக் கொண்டு திருப்பணி வேலைகளைச் செய்து வருகிறாராம் ஸ்தபதியார்.

கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருப்பணி துவங்கிய  போது டெண்டர் எடுத்த புதுக்கோட்டையைச் சேர்ந்த குமார் என்ற இதே ஸ்தபதியார் தான் தற்போதும் முக்தீஸ்வரர் கோவிலில் திருப்பணியை மீண்டும் டெண்டர் எடுத்து அதனை ஆமை வேகத்தில் கொண்டு செல்வதும், அதிகாரிகள் கூறியபடி கடுக்காய், சுண்ணாம்பு கலவையைக் கொண்டு தரமாக செய்யாமலும், எம். சாண்ட், பி.சாண்ட் மண்ணைக் கொண்டு தரமற்ற முறையில்  கலவையைக் கொண்டு , கடமைக்கு என வேலை செய்வது அனைத்து தரப்பினரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.

எம்.சாண்ட் பயன்படுத்தி இராஜகோபுரத்துக்கான கட்டுமானப் பணி.

கோவில் திருப்பணி விவாத பொருளாக மாறிய நிலையில் ஸ்தபதியார் குமார் என்பவர் அவசரகதியில் புணரமைப்பு வேலைகளை சரியாக பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக செய்து வருவதால் கோவில் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் உள்ளிட்ட இடங்கள் முன்பு இருந்ததை போலவே பழுதுடன் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்தறிய இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் சூரியநாராயணனை தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்று பதிலளிக்கவில்லை.

ஸ்ரீரங்கம் ,திருவானைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முதன்மை கோயில்களுக்கு முன்னதாகவே, இந்த முக்தீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வந்தது என கூறப்படும் நிலையில், கோவில் திருப்பணியைஅதிக கவனம் எடுத்து அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து, சிறப்பான முறையில் குடமுழுக்கு நடத்த வேண்டும் எனவும்,முதலாவதாக இக்கோவில் திருப்பணிக்கென ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் என்ன ஆனது யாரிடம் சென்றது என்ற கேள்விகளையும், இதனை முழுமையாக அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கின்றனர் மகாளிகுடி கிராம பொதுமக்களும் பக்தர்களும்.

இதே மாகாளிகுடி கிராமத்தில் தான் விக்ரமாதித்த ராஜா பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

— ஜோஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.