அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பட்டாசு ஆலைகளில் ரீல்ஸ் மோகம் ! அதிர்ச்சி ரிப்போர்ட் !       

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பார்க், பீச் பக்கம் நின்னு எடுத்துகிட்டு இருந்த ரீல்ஸ் மோகம் இன்றைக்கு, அபாயம் நிறைந்த பட்டாசு ஆலைகளையும் விட்டுவைக்கவில்லை என்பது பெரும் சோகம். எப்போதும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தின் பிடியிலேயே இருத்திவைக்கப்பட்ட தொழில்களுள் ஒன்று பட்டாசுத் தொழில். நாட்டின் பட்டாசு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிலை நம்பி இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் நடத்தி வரும் நிலையில், சமீப ஆண்டுகளில் நிகழ்ந்த பல பட்டாசு ஆலை வெடிவிபத்துகளுக்குப் பின்னால் மனிதத் தவறுகள், பாதுகாப்பு அலட்சியம் மற்றும் விதிமீறல்களே முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது ‘ரீல்ஸ்’ மோகம் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

பட்டாசு தயாரிப்பு அறைகளுக்குள் மொபைல் போன்கள், மின்சாதனங்கள் மற்றும் கதிர்வீச்சு ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு கருவியையும் கொண்டு செல்லக் கூடாது என்பது அரசு மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு விதிமுறைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற ஆர்வத்தில் சில தொழிலாளர்கள் ஆலைக்குள்ளேயே செல்போன் பயன்படுத்தி வீடியோக்களை பதிவு செய்து, ரீல்ஸ் வெளியிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அண்மையில் நடைபெற்ற சில பட்டாசு ஆலை வெடிவிபத்துகளுக்குப் பிறகு, சம்பவ இடங்களில் சேதமடைந்த செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் தகவலும் இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. இது பாதுகாப்பு விதிமுறைகள் எந்த அளவுக்கு பின்பற்றப்படுகின்றன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

யாவரும் கேளீர்

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

பட்டாசு தயாரிப்பு அறைகளில் அலுமினியப் பவுடர், கன் பவுடர் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய வேதிப்பொருட்கள் நுண்துகள்களாக காற்றில் கலந்திருக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது மிகப்பெரிய பாதுகாப்பு ஆபத்தாக மாறக்கூடும் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவது தொழிலாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல; ஆலை நிர்வாகமும், உரிமையாளர்களும் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. தொழிலாளர்கள் மொபைல் போன்களை உள்ளே எடுத்துச் செல்லாத வகையில் சோதனை, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என தொழில் பாதுகாப்பு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஒரு சில நொடிகள் சமூக வலைதளத்தில் வைரலாக வேண்டும் என்ற ஆசை, பல குடும்பங்களின் வாழ்வையே சில நொடிகளில் சிதைக்கக்கூடும். எனவே, பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதோடு, ரீல்ஸ் எடுக்கும் கலாச்சாரத்திற்கும் உடனடியாக கட்டுப்பாடு விதிக்குமா, அரசு?

–      மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.