40 ஆண்டு கால போராட்டத்திலே எங்களுக்கு கிடைத்த ஒரு சிறிய வெளிச்சம் !
நாற்பது வருடங்களுக்குப்பிறகு, கலைமகள் சபாவுக்கு ஒரு விடிவு காலம் கொண்டு வந்திருக்கறாங்க. ஒரு நபர் ஆணையத்தின் நீதிபதி நிகழ்வுகளை மிக சிறப்பா எடுத்துரைத்தாங்க. கூலி வேலை செய்றவங்க, தொழிலாளிங்க, பெயிண்ட் அடிக்கிறவங்க, மேஸ்திரிங்க வேலை செஞ்சு கஷ்டப்பட்டு உருவாக்குன சபா இது.
கலைமகள் சபா சொத்துக்களை வித்து பணமாக கொடுத்தா நல்லா இருக்கும். கலைமகள் சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பா, ஏற்கெனவே மேனுவலா இருந்தப்போ 5 இலட்சத்து சொச்சம்னு சொன்னாங்க. இப்ப அதையெல்லாம் கம்யூட்டரைஸ் பன்னிட்டு 6 இலட்சத்து சொச்சம்னு சொல்றாங்க. இது எப்படி மாறுச்சுனு கேட்குறாங்க. இதுல எந்த மாற்றமும் கிடையாது. ஏற்கெனவே, நாங்க போன டைம் போனப்ப எல்லா லெட்ஜரையும் காட்டுனாங்க. எல்லா லெட்ஜரையும் சரியா மெயின்டைன் பன்றாங்க. இது சம்பந்தமா கோர்ட்ல கேட்டப்பவும் பதில் சொல்லிட்டாங்க. உறுப்பினர் எண்ணிக்கையில எந்த பிரச்சினையும் இல்லை.
இந்த விவகாரத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்ததுல, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை சேர்ந்த மேலாளர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலு, சின்னத்துரை, கமலநாதன் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது.
தாமதமானாலும் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும்னு நம்பிக்கை இப்போ கிடைச்சிருக்கு. எங்களோட கருத்துகளை கேட்டாங்க. ஒரு பிரிவினர் நிலமா வேணும்னு சொல்லியிருக்காங்க. இன்னொரு தரப்பில் பணமாக கிடைத்தால் நல்லாயிருக்கும்னு சொல்லியிருக்காங்க.
நிலமாகத்தான் வேண்டும்னு கேட்டவங்களுக்கு விளக்கம் கொடுத்தாங்க. ஏற்கெனவே, இருக்கிற நிலத்தை வித்து பிரிச்சு கொடுக்கனும்னுதான் கோர்ட்டு உத்தவு இருக்கு. அந்த நீதிமன்ற உத்தரவைத்தான் நாங்க செயல்படுத்த முடியும். இதுக்கு மேல ஏதாவது வேணும்னா நீதிமன்றத்தைத்தான் அணுகணும்னு சொல்லி இருக்காங்க.
இது முதல்படிதான். இது இந்த 40 ஆண்டு கால போராட்டத்திலே எங்களுக்கு கிடைத்த ஒரு சிறிய வெளிச்சம் மட்டுமே. இந்த போராட்டத்தில் தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு அன்பான வேண்டுகோள் சொல்கிறோம் எங்களுக்கு உங்களை (அங்குசம்) போன்ற ஊடகவியாளர்களின் ஒத்தழைப்பு இருந்தால் உடனடியாக நாங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவோம் எங்களுக்கு கிடைக்க உறுதுணையாக இருக்கும்.
– வே.தினகரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.