கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாழவந்தி பகுதியை சேர்ந்த வலியாத்தாள் (45), க.பெ.சக்திவேல் என்பவர் கடந்த 01.03.2024 அன்று மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பொது நீர்த்தேக்க தொட்டிக்கு அருகே அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த தங்கராசு (63/24), த.பெ. பழனியாண்டி என்பவர் மீது எதிர்பாராதவிதமாக துணி துவைத்த அழுக்கு நீர் தெளித்ததில், ஆத்திரமடைந்த தங்கராசு மேற்படி பெண்ணை தகாத வார்த்தைளகால் திட்டி, சைக்கிளில் வைத்திருந்த அருவாளால் கழுத்து மற்றும் வலது தோள்பட்டை ஆகிய பகுதிகளில் தாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான சக்திவேல் (55) என்பவர் கொடுத்த . 41/2024 u/s 294(b), 324, 307, 506(2) IPC r/w 4 of TNPHW Act ன் படி அன்றைய தினமே வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (II -ADJ) நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக திருமதி.எழிலரசி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (01.08.2026) நீதிபதி. கோபிநாதன் அவர்கள் எதிரி தங்கராசு (63/24), த.பெ. பழனியாண்டி, பெருமாள் கோவில் தெரு. வாழவந்தி, முசிறி தாலுகா, திருச்சி மாவட்டம் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய். 1000 அபராதம் வழங்கியும் தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணிபுரிந்த ஜம்புநாதபுரம் காவல் நிலைய நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி. சாந்தி என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப பாராட்டியுள்ளார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.