வறுமையிலும் நேர்மை – பாராட்டும் கௌரவமும்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

​திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் தெருவில் கீழே கிடந்த மதிப்புமிக்க கைபேசியை (Mobile Phone) எடுத்த அம்மையார் ஒருவர், தனது வறுமையான சூழ்நிலையிலும் நேர்மையுடன், அதை உடனடியாக உறவினர் முன்னிலையில் நமது செல்போன் சங்க  அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

​நமது சங்கத்தின் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட்டு, செல்போனின் பாக்ஸ் (Box), பில் (Bill) மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றைச் சரிபார்த்து, கைபேசி உரியவரிடம் பாதுகாப்பாகத் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

​தனது ஏழ்மை நிலையிலும் பேராசை கொள்ளாமல், பிறர் பொருளை உரியவரிடம் சேர்ப்பித்த அந்த அம்மையாரின் நேர்மையான செயலைப் போற்றும் வகையில், நமது சங்கத்தின் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

“நேர்மையே உயர் குணம்”

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழும் அந்த அம்மையாருக்கு நமது சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

மு.சையதுமுஸ்தபா, மாவட்ட தலைவர்

ஒருங்கிணைந்த செல்போன், சிம்கார்டு மற்றும் உதிரிபாகங்கள் விற்பனையாளர் சங்கம்,

திருச்சி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.