பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்க இந்தியா ஜப்பான் இடையே கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் கூட்டு முயற்சி
ஆகஸ்ட் 13, 2026 இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படும் K-KCCS நிறுவனம், ஜப்பானின் ‘H2 இன்னோவேஷன்’ நிறுவனத்துடன் இணைந்து ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் தொழில்நுட்பங்களில் ஜப்பான் நிறுவனங்கள், இந்திய தொழிற்துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையே கூட்டாண்மையை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக, ஜப்பானின் ‘H2 இன்னோவேஷன்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. யோசுகே மோரி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர் அரசுப் பிரதிநிதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களைச் சந்தித்து, பசுமை ஆற்றல் துறையில் தொழில்நுட்பப் பங்களிப்பு, அறிவுப் பகிர்வு மற்றும் கூட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த நிகழ்வில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் பற்றிய விளக்கக்காட்சியும், முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.
திரு. மோரி அவர்கள் சுற்றுச்சூழல், ஆற்றல் சேமிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களில் நீண்ட அனுபவம் கொண்டவர். இவர் DREAM (ZEEP24) ஹைட்ரஜன் மின் உற்பத்தி அமைப்பை அறிமுகப்படுத்திய ‘H2 இன்னோவேஷன்’ நிறுவனத்தின் நிறுவனராவார். மேலும், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ‘H2 Innovation USA, Inc.’ நிறுவனத்தையும் இவர் தொடங்கியுள்ளார்.
இந்தக் கூட்டு முயற்சியானது, எதிர்கால தூய்மை ஆற்றலாக விளங்கும் பசுமை ஹைட்ரஜனின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிப்பது, எதிர்கால போக்குவரத்து மற்றும் பிற துறைகளில் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. மேலும், தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு ஹைட்ரஜன் தயாரிக்கும் முறைகள் குறித்தும் ஆராயப்படுகிறது. “நீரே எதிர்காலத்திற்கான எரிபொருள்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, நீண்ட கால நோக்கில் கடல்நீரைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிக்கும் சாத்தியக்கூறுகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வருகை மற்றும் ஆலோசனைகளை K-KCCS இந்தியா நிறுவனத்தின் தலைவரான திரு. கருணாநிதி காசிநாதன் அவர்கள் ஒருங்கிணைக்கிறார். ஜப்பானில் 16 ஆண்டுகள் உட்பட 28 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதேச அனுபவம் கொண்ட இவர், தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் மற்றும் கட்டமைப்புத் துறைகளில் இந்தியா-ஜப்பான் இடையிலான பல கூட்டுத் திட்டங்களில் பணியாற்றியுள்ளார். JICA, JETRO, ஜப்பான் தூதரகம் போன்ற முதன்மை அமைப்புகளுடனும் இவர் இணைந்து செயல்பட்டுள்ளார்.
கல்வி மற்றும் தொழிற்துறை இடையிலான இந்த முயற்சியின் கீழ், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
பல்கலை கழக பதிவாளர்(பொ) முனைவர் M.சுந்தரமாரி, ஜப்பானின் ‘H2 இன்னோவேஷன்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யோசுகே மற்றும் K-KCCS இந்தியா நிறுவனத்தின் தலைவரான திரு. கருணாநிதி காசிநாதன் அவர்கள் கையொப்பம் இட்டனர் .
இத்திட்டம் பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான சிறந்த தளத்தை அமைத்துத் தரும். தூய்மை ஆற்றல் உற்பத்தியில் இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து செயல்படும் இத்தருணத்தில், இந்த முயற்சி மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதை தொடர்ந்து ஜப்பானின் ‘H2 இன்னோவேஷன்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. யோசுகே மோரி காந்தி கிராம ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
இதில் பசுமை ஹைட்ரஜன் முக்கித்தும், அதில் உள்ள தொழில் நுட்பம் மற்றும் சவால்கல் குறித்து விரிவாக விளக்கினார்.
பல்கலை கழக துணைவேந்தர் ந. பஞ்சநதம் காணொளி மூலம் தலைமை உரை ஆற்றினார். காந்திகிராம பல்கலைக்கழகம், புதுப்பிக்க தக்க எரிசக்தி துறை யில் பல்வேறு முன்னடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முலம் இந்தியா அரசு எடுத்துள்ள “தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம்” திட்டத்தின் திறன் மேம்பட்டு திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக பசுமை ஹைட்ரஜன் துறையில் ஆராய்ச்சி செய்வும் பெரிதும் உதவியாக இருக்கும் .
K-KCCS இந்தியா நிறுவனத்தின் தலைவரான திரு. கருணாநிதி காசிநாதன் பேசுகையில் காந்திகிராம இந்த முயற்சி மாணவர்களுக்கு ஜப்பான் தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்வதுடன் அதை நமது நாட்டிற்க்கு எதுவாக எவராலும் மாற்றி உருவாக்கலாம் என்பதை அறிய கொள்ள எதுவாக இருக்கும் என்று கூறினார் .
இந்த ஒப்பந்த ஏற்ப்டுகளை பல்கலை கழக ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் மீனாட்சி ஒருங்கிணைத்தார் .







Comments are closed, but trackbacks and pingbacks are open.