லோகோ பைலட்டுகள் பஞ்சப்படி- பயணப்படி நிறுத்தம் ! எஸ்.ஆர்.எம்.யு போராட்டம் அறிவிப்பு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இன்று எஸ்.ஆர். எம்.யு. தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பி.என்.எம். எனும் குறை கேட்புக் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் பாலக்ராம் நெகி தலைமை தாங்கினார்.

எஸ்.ஆர். எம். யூ துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் கலந்து கொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன் வைத்தார் பின்னர் எஸ்.ஆர். எம். யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் நிருபர்களிடம் கூறும்போது,

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

லோகோ பைலட்டுகள் மற்றும் டிக்கெட் பரிசோதர்களுக்கு 8 கிலோமீட்டருக்கு மேல் வழங்கப்பட்டு வந்த  பஞ்சப்படி மற்றும் பயணப்படி நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதே போன்று 8-வது சம்பள கமிஷன் அறிவிப்பை விரைந்து வெளியிடவும், ரயில்வே குடியிருப்புகளில் உள்ள பிரச்சனைகள், தண்டவாளங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தெரிவித்துள்ளோம். இந்த கருத்து கேட்கக் கூட்டம் நாளையும் நடைபெற உள்ளது.

பஞ்சப்படி  மற்றும் பயணப்படி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். இதில் கோட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.