அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முன்விரோதத்தால் தாக்குதல்…மாணவர் பலி! குற்றவாளிக்கு குண்டாஸ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டாத்தூர், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த கணல் (19/26), த.பெ. சரவணன் என்பவர் புத்தனாம்பட்டி NMC கல்லூரியில் B.Com மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாகவும், கடந்த 19.07.2026 அன்று மாலை 17.30 மணியளவில், மேற்படி கணல் மற்றும் அவரது சகோதரர் கவின் (17/26), அவரது நண்பர் ஹரித் (17/26), ஆகியோர்கள் இருசக்கர வாகனத்தில் கோட்டாத்துரிலிருந்து புத்தனாம்பட்டிக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளனர்.

அப்போது அங்கு ஐந்து இருசக்கர வாகனங்களுடன் நின்று கொண்டிருந்த 1.தீனா த/பெ ஆனந்தன், ஸ்ரீநகர் காலனி, தெற்கு தெரு, புத்தனாம்பட்டி, 2.விமல்ராஜ் த/பெ வேல்முருகன், கீழத்தெரு, அழகியமணவாளம் ஆகியோர்கள் தங்களது நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து மேற்படி கணலின் வாகனத்தை வழிமறித்து ஏற்கனவே உள்ள முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு, தகாத வார்த்தையால் திட்டி, வண்டியை மெதுவா ஒட்டிக்கிட்டு வரமாட்டிங்களா என கேட்டு பிரச்சனை செய்துள்ளனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

விமல்ராஜ்
விமல்ராஜ்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும், மேற்படி எதிரிகள் கணல், கவின் மற்றும் அவரது நண்பர் ஹரித் ஆகிய மூவரையும் தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று, ஓமாந்தூர் காட்டுப்பகுதிக்குள் வைத்து கணலை கத்தியால் கிழித்தும், கல் மற்றும் கட்டையால் அடித்தும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட கணலின் சகோதர் கவின் என்பவர் கொடுத்த புகாருக்கு புலிவலம் காவல் நிலைய குற்ற எண். 235/2026 ன் படி 20.07.2026 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சையிலிருந்த கணல் கடந்த 25.07.2026 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இவ்வழக்கின் சட்டப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இந்நிலையில் மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி 1) விமல்ராஜ் 21/26, த/பெ வேல்முருகன், கீழத்தெரு, அழகியமணவாளம், மண்ணச்சநல்லூர், திருச்சி மாவட்டம் என்பவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப.,  பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு  (21.08.26) சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போதுவரை மொத்தம் 66 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.