திருச்சி மத்திய சிறையில் வழக்கறிஞர்களுக்கே இந்த நிலையா ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மத்திய சிறையில் வழக்கறிஞர்கள் காத்திருப்பு அறை அவல நிலை – கழிவறையில் தண்ணீர் வசதியே இல்லை! AILU கடும் கண்டனம்

திருச்சி மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்கள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள காத்திருப்பு அறை மற்றும் அதனுடன் உள்ள கழிவறைகளின் நிலை மிகவும் மோசமாகவும், சுகாதாரமற்றதாகவும் இருப்பதை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU), திருச்சி மாவட்டம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

வழக்கறிஞர்கள் தங்களது சட்டப்பணியின் ஒரு பகுதியாக தினந்தோறும் திருச்சி மத்திய சிறைக்கு வந்து, சிறையில் உள்ள கைதிகளை சந்தித்து அவர்களுக்கு சட்ட ஆலோசனைகளையும், சட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இவ்வாறு நீதித்துறையின் முக்கிய அங்கமாக செயல்படும் வழக்கறிஞர்கள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள்கூட முறையாக இல்லாதது மிகவும் வேதனைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

குறிப்பாக, வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் கழிவறைகளில் தண்ணீர் வசதியே இல்லை. தண்ணீர் இல்லாததால் கழிவறைகளை முறையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்படாமல், நீண்ட காலமாக பராமரிப்பின்றி கிடப்பதால் மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுகின்றன.

கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் அவற்றை சுத்தம் செய்வதற்கும் போதிய வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவறைகளில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. வழக்கறிஞர்கள் நீண்ட நேரம் சிறை வளாகத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில், இயற்கை உபாதைகளை கழிப்பதற்குக்கூட முறையான வசதி இல்லாதது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், காத்திருப்பு அறையின் ஒட்டுமொத்த பராமரிப்பிலும் சிறை நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வழக்கறிஞர்கள் தினசரி பயன்படுத்தும் இடம் என்பதால், அந்தப் பகுதி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சிறையில் உள்ள கைதிகளின் சட்ட உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், அவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்காகவும் வழக்கறிஞர்கள் சிறை வளாகத்திற்கு வருகின்றனர். வழக்கறிஞர்களுக்கான காத்திருப்பு அறையில் கழிவறைக்கு தண்ணீர் போன்ற அடிப்படை வசதியே இல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்களின் பணிச்சூழலை அவமதிக்கும் வகையிலும், அவர்களின் அடிப்படை தேவைகளை புறக்கணிக்கும் வகையிலும் உள்ளது.

எனவே, திருச்சி மத்திய சிறை நிர்வாகம் இந்த பிரச்சினையை சாதாரணமான ஒன்றாக கருதாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

AILU-வின் கோரிக்கைகள்

  1. வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் கழிவறைகளுக்கு உடனடியாகவும், தடையின்றியும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.
  2. தற்போது அசுத்தமாக உள்ள அனைத்து கழிவறைகளையும் உடனடியாக முழுமையாக சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்து சுகாதாரமான நிலையில் பராமரிக்க வேண்டும்.
  3. கழிவறைகளை தினசரி சுத்தம் செய்வதற்கான நிரந்தரமான நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.
  4. பழுதடைந்த குழாய்கள், கதவுகள், கழிப்பறை உபகரணங்கள் மற்றும் இதர வசதிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  5. வழக்கறிஞர்கள் காத்திருப்பு அறையில் போதிய இருக்கைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
  6. சிறைத்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக காத்திருப்பு அறை மற்றும் கழிவறைகளை ஆய்வு செய்து, குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  7. எதிர்காலத்திலும் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க, வழக்கறிஞர்கள் காத்திருப்பு அறை மற்றும் கழிவறைகளின் பராமரிப்பை முறையாக கண்காணிக்க வேண்டும்.

வழக்கறிஞர்கள் சிறையில் உள்ள கைதிகளின் சட்ட உரிமைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்வது சிறை நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாகும்.

கழிவறைக்கு தண்ணீர் கூட இல்லாத நிலை தொடர்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU), திருச்சி மாவட்டம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, வழக்கறிஞர்களின் உரிமைகள் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை திருச்சி மாவட்ட அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU) சார்பாக  ரெங்கராஜன் மாவட்ட தலைவர், ஜார்ஜ் கெவின், மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.