பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் ! தப்பியோடிய பாதிரியார் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடைப் பகுதியில் இயங்கி வரும் புனித மரியன்னை அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பாதிரியாருமான ஜெயராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி ஒருவர் மற்றொரு மாணவியுடன் வேன் கட்டணம் குறித்துக் கேட்பதற்காகப் பள்ளி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அப்போது தலைமை ஆசிரியர் ஜெயராஜ், உடன் வந்த மாணவியை வெளியே அனுப்பிவிட்டு, சம்பந்தப்பட்ட மாணவியை மட்டும் தனியாக அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அலமாரியில் சில பொருள்களை வைக்குமாறு கூறி, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மேலும், மாணவியின் கழுத்திலும் கன்னத்திலும் முத்தமிட்டதுடன், தப்ப முயன்ற மாணவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு இதை யாரிடமும் சொல்லக் கூடாது, நாம் இனி நண்பர்கள் என மிரட்டியுள்ளார்.

ஜெயராஜ்
ஜெயராஜ்

வீட்டிற்குச் சென்ற மாணவி சோகமாக இருந்ததைக் கண்டு தாய் விசாரித்தபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதுமட்டுமின்றி, எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடமும் இவர் இதேபோன்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கிராம மக்கள் திரண்டதை அறிந்த தலைமை ஆசிரியர் ஜெயராஜ் பள்ளியிலிருந்து தப்பியோடிவிட்டார்.

தலைமறைவான அவரைத் சமயபுரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் கணேசன், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பள்ளிக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பிற மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

—  ஜோஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.