பளு தூக்கும் போட்டி : இந்தியாவிற்கு பெருமை சேர்த்த திருச்சி வீரர்கள்!
தாய்லாந்தின் Chiang Mai City இல் நடைபெற்ற International Powerlifting Championship போட்டியில், இந்தியா சார்பாக திருச்சி மண்ணச்சநல்லூர் MR REAL STRONGMAN GYM, ஐ சேர்ந்த வீரர்கள் பல்வேறு பதக்கங்களை பெற்று அசத்தியுள்ளனர்.

1.சரண் குமார் – Junior பிரிவில் 67.5 KG Category-யில் கலந்து கொண்டு, தங்கப் பதக்க வென்று சாதனை படைத்துள்ளார்!
2.அஜிதா -Sub-Junior பிரிவில் 67.5 KG Weight Category-ல் கலந்து கொண்டு,தங்கப் பதக்க வென்று சாதனை படைத்துள்ளார்!
3.சதீஷ் – Senior பிரிவில் 75 KG Category-யில் கலந்து கொண்டு,தங்கப் பதக்க வென்று பெருமை சேர்த்துள்ளார்!
4.திரு. சந்திரசேகர் – Master Category (40–50 வயது) பிரிவில் கலந்து கொண்டு, தங்கப் பதக்க வென்று சாதனை படைத்துள்ளார்!
5.விஜயகுமார் – Senior 67.5 KG Category பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றதுடன், Overall Strongman – Runner Up பட்டத்தையும் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில், Amateur Powerlifting Association of Tamilnadu சார்பில், India Powerlifting President கார்வேந்தன்
வழிகாட்டுதலின் கீழ், பயிற்சியாளர் MR REAL STRONGMAN GYM விஜய் சார்பாக வீரர்கள் கலந்து கொண்டு இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.