போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு “CENTRAL ZONE CRICKET CUP – 2026” கிரிக்கெட் போட்டி
திருச்சியில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு காவல்துறை மத்திய மண்டலம் சார்பில் “CENTRAL ZONE CRICKET CUP – 2026” கிரிக்கெட் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
“SAY NO TO DRUGS – SAY YES TO SPORTS” என்ற விழிப்புணர்வு செய்தியை மையமாகக் கொண்டு நடைபெற்ற இப்போட்டியில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை மற்றும் பொதுமக்கள் அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
பல கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டிகளின் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா KTS Cricket Ground, திருச்சியில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி பொதுமக்கள் பிரிவில் தஞ்சாவூர் Friends CC அணி முதலிடத்தையும், கரூர் White Rose Cricket அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன.
அதேபோல், காவல்துறை பிரிவில் புதுக்கோட்டை காவல்துறை அணி முதலிடத்தையும், நாகப்பட்டினம் காவல்துறை அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் IPS அவர்கள் கோப்பைகள், பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மேலும், சிறப்பாக செயல்பட்ட வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் Man of the Match, Best Batsman, Best Bowler உள்ளிட்ட பல்வேறு தனிநபர் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், போட்டி ஏற்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த கிரிக்கெட் போட்டி மூலம் விளையாட்டின் வாயிலாக இளைஞர்களை நல்வழிப்படுத்துதல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் காவல்துறை–பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்கள் வலியுறுத்தப்பட்டன.
“விளையாட்டைத் தேர்ந்தெடுப்போம்…
போதைப்பொருளைத் தவிர்ப்போம்…
வலிமையான சமூகத்தை உருவாக்குவோம்!”
SAY NO TO DRUGS – SAY YES TO SPORTS 🏏
தமிழ்நாடு காவல்துறை – மத்திய மண்டலம்








Comments are closed, but trackbacks and pingbacks are open.