சைபர் குற்றப் பணத்தை டாலராக மாற்ற உதவி இளைஞர்கள் கைது!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட குற்றச்செயல்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று 07.09.2026-ம் தேதி காலை 06.00 மணிக்கு நாகமலைபுதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் ரோந்து பணியின் போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்து, அவர்களிடமிருந்து 26 Bank Pass books, 18 mobile Phones, 77 ATM cards, 18 Cheque Books, 60 Sim Cards சைபர்கிரைம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தகவல் கிடைத்தவுடன் அங்கு வந்த சைபர் கிரைம் போலீசார் அவர்களை விசாரணை செய்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 1) பராஸ்கான், வயது 23, த/பெ. ஜாபர் ஹீசைன், ராமநாதபுரம் மாவட்டம், 2) ஹபீப் முகமது, வயது 21, த/பெ.பஜாருல் ஹக், புதுக்கோட்டை மாவட்டம், 3) முகமது முபாரக், வயது 23, த/பெ.முஸ்தபா, ராமநாதபுரம் மாவட்டம் என்றும் அதில் பராஸ்கான் என்பவர் Visual Communication படித்து முடித்து விட்டு தற்போது வேலை ஏதும் இல்லாத காரணத்தினால் குறுக்கு வழியில் அதிகம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அவருடைய வங்கி கணக்கையும் பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகளையும் பெற்று அதன் மூலமாக சைபர்குற்றத்தில் பொதுமக்களை ஏமாற்றி வரும் பணத்தை ATM withdrawal செய்து அதை டாலராக மாற்றி (ID running job) அனுப்புவதற்கு உதவியாக இருந்துள்ளார்.

இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வந்து நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி அவருக்கு உதவியாக ஹபீப் முகமது மற்றும் முகமது முபாரக் ஆகியோர் உதவியுடன் இதை செய்து ஒரு லட்ச ரூபாய் இந்திய பணத்தை 1000 டாலராக மாற்றி அனுப்பி அதற்கு கமிஷனாக ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.6,300/- கமிஷனாக பெற்றுள்ளார். இவ்வாறாக கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை 10 லட்சம் ரூபாய் வரை கமிஷனாக பெற்றுள்ளார். அதை மேற்கண்ட எதிரிகள் மூவரும் பங்கிட்டு ஜாலியாக செலவு செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 26 Bank Pass books, 18 mobile Phones, 77 ATM cards, 18 Cheque Book, 60 Sim Cards நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மேலும், இதுபோன்ற சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கமிஷன் பணத்திற்காக சிம்கார்டுகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவற்றை தரும் நபர்கள் மீதும், சைபர் குற்றவாளிகளுக்கு இந்திய பணத்தை டாலராக மாற்றி அனுப்பி உதவி செய்யும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.