நீர்த்தேக்கங்களால் தூண்டப்படும் நிலநடுக்கங்கங்கள் !

ஏன் வேண்டாம் மேகேதாட்டு அணை? – 3

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அணைகளை ‘நீர்ப்பாசனத் திட்டங்களின் தாய்’ என்பார்கள். அணைகள், அதற்கு மட்டும் தாயல்ல.  நிலநடுக்கங்களுக்கும் அதுவே தாய். நீர்த்தேக்கங்களால் தூண்டப்படும் நிலநடுக்கங்களை ஆங்கிலத்தில் RIS (Reservoir – induced Seismicity) என்று குறிப்பிடுவர். ஒரு நீர்த்தேக்கத்தில் பேரளவில் செயற்கையாகத் தேக்கப்படும் நீர் அதைச் சுற்றியுள்ள நிலங்களின் நுண்துளைகள், நிலவெடிப்புகளில் தங்கி நிலத்துக்கு கூடுதல் அழுத்தத்தை உருவாக்கும். அது நில நடுக்கங்களைத் தூண்டும் என்கின்றனர் புவி அறிவியலாளர்கள்.

ஓரிடத்தில் கனத்த நீரிடி (Cloud Bursting) பொழிந்தால்கூட அவ்விடத்தில் நில அழுத்தம் ஏற்பட்டு அது நில அதிர்வினை உண்டாக்கும் வாய்ப்புள்ளது என்பது புவி அறிவியல் பாடம். இமயமலை போன்ற புவியியல் நொய்மைப் பகுதிகளில் பொழியும் நீரிடிகள் இவ்வாய்ப்பை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. நீரிடிக்கே இந்நிலைமை எனில், மாபெரும் அணை நீரின் அழுத்தம் பற்றி யோசித்துப் பார்க்கவும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

கண்டத்தட்டுக்களின் நகர்வால் நிலம் ஏற்கனவே, அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், இதுபோன்ற செயற்கை உருவாக்கங்கள் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இதுவே நில அதிர்வுகளுக்குக் காரணமாகிறது. தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டே இருக்கும் கண்டத் தட்டுக்களின் நகர்வு நில அமைப்பில் பல திடீர் மாற்றங்களை உருவாக்குவது இயல்பு. நிலநடுக்கம், ஆழிப்பேரலை, ஆறுகளின் திசைமாற்றம், நிலப்பிளவு போன்றவை இதில் அடங்குகின்றன.

ஒரு காலத்தில் காவிரி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து இன்றைய பழவேற்காட்டுக்கு அருகே கடலில் கலந்துக் கொண்டிருந்தது என்பது புவியியல் வரலாறு. பின்னர் கண்டத்திட்டுகளின் நகர்வால் நம் நிலத்தின் ஓரிடத்தில் வடக்கு தெற்காக ஒரு பெரும் பிளவு ஏற்படுகிறது. அதனால், காவிரியின் நீரோட்டம் கிழக்கிலிருந்து தெற்கு திசைக்கு மாறி இன்றைய மேட்டூர் பகுதிக்குத் திரும்புகிறது. அந்த நிலப்பிளவுதான் இன்றைய ஒகனேக்கல் அருவி. இவை செய்மதி (செயற்கைக் கோள்) உதவியால் கண்டறியப்பட்டுள்ள புவியியல் . ஆய்வாகும். மேகேதாட்டு அணை ஒகேனக்கலில் இருந்து வெகு தொலைவில் இல்லை.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மீண்டும் நீர்த்தேக்கங்களால் தூண்டப்படும் நிலநடுக்கங்களுக்கு வருவோம். இத்தகைய நிலநடுக்கங்கள் உலகில் இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்துள்ளன. முதல் நிலநடுக்கம் ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ ஆற்றின் மீது கட்டப்பட்ட ஹூவர் அணையின் அருகே 1930-ல் பதிவானது. அது அமெரிக்காவில்தானே நமக்கென்ன என்று அலட்சியமாக நினைக்கலாம். இந்த RIS  நிகழ்வு நமது இந்திய ஒன்றியத்திலும் நடந்துள்ளது. 1967 டிசம்பர் 10 அன்று மகாராட்டிரா மாநிலம் கொய்னாவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அன்று அணைகளால் தூண்டப்பட்ட நிலநடுக்கத்திலேயே பெரியதாக இருந்தது என்கிறார் ஆய்வாளர் ஹெச்.கே. குப்தா. காரணம் அதில் 200 பேர்கள் உயிரிழந்தனர்.

உலகிலேயே அணைகளைத் தீவிரமாக காதலிப்பது சீன அரசாங்கம்தான். கடந்த 2008 மே 12இல் சீனாவின் சிப்பிங்பு அணையால் உருவான சிச்சுவான் நிலநடுக்கத்தில் 68,000 பேர் மரணம் அடைந்தனர். அப்போது இந்தியாவின் 200 என்ற பழைய எண்ணிக்கை சிறிய எண்ணாக மாறியது. அணையின் உயரம் 100 மீட்டருக்கு மேல் போனால் நிலநடுக்கம் உருவாவற்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அதனால்தான் திட்டமிடப்பட்டுள்ள மேகேதாட்டு அணையின் உயரத்தை 99 மீட்டரோடு நிறுத்தி விட்டார்கள் போலும்.

(தொடரும்)

எழுத்தாளர் நக்கீரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.