‘அன்பில் அவன்’ இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்!
முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார், சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் நெருக்கத்தையும், இனிமையான காதல் தருணங்களையும் அழகாகப் பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. காதலின் வலி, காதலியின் பெருமை, பிரிவின் ஏக்கம் என உணர்வுகளை தாங்கி நிற்கும் இப்பாடல், காதல் உலகிற்குள் கேட்பவர்களை மெல்ல இழுத்துச் செல்கிறது.
‘அன்பில் அவன்’ படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘அன்பில் அவன்’.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.