450 ஆட்டுக்கிடாய், 10,000 கிலோ அரிசி சாதம்! 25,000 பேருக்கு பிரம்மாண்ட கறி விருந்து!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் வெள்ளக்கல் கிராமத்தில் கழுங்கடி முனியாண்டி சாமி கோவில் உள்ளது. இந்த முனியாண்டி கோவில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை திருவிழா நடத்துவது வழக்கம்,  இந்தநிலையில் 37வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிடாவெட்டி விருந்து வழங்க காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் அன்னதான விழா நடைபெற்றும்

வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில்
வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில்

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்த முனியாண்டி கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட ஆடுகளை இரவு முழுவதும் வெட்டி சமைத்து காலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.

இன்று 38 ஆவது ஆண்டு திருவிழாவை ஒட்டி நேற்று காலை கிடாவுடன் பொங்க பானை ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்ட்டு  முனியான்டி கோவில் முன்பு ஆட்டுகிடாய்கள் வெட்டப்பட்டது இன்று அதிகாலை முதல் அந்த கிடாக்களை சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில் பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம் உள்ளிட்ட சுற்றியுள்ள ஊர்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆண்டு கழுங்கடி முனியாண்டி கோவிலில் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 450 ஆட்டு கிடாய்கள்  வெட்டப்பட்டி கறி விருந்து இன்று காலை 10மணிக்கு தொடங்கி இரவு வரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட உள்ளது. இந்த அன்னதானத்திற்காக அரிசி 10 ஆயிரம் கிலோ, நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் ஆட்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெறுவதால் இத்திருவிழாவில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக அவனியாபுரம் காவல் துணை ஆனையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.