ரிலீஸ் தடங்கலில் இருந்து மீண்ட ‘டார்க் ஹெவன்’
‘கோதை எண்டெர்டெய்ன்மெண்ட்’ & எம்.எஸ்.ஸ்விஸ் பிலிம் ஃபேக்டரி’ இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘டார்க் ஹெவன்’. ‘டி-3’ என்ற படத்தை டைரக்ட் பண்ணிய பாலாஜி தான் இப்படத்தின் டைரக்டர். இதில் ‘பிக்பாஸ்’ புகழ், சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள் டி.சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். பி.ஆர்.ஓ. : சக்தி சரவணன்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி ‘டார்க் ஹெவன்’-ஐ ரிலீஸ் பண்ணும் முடிவுடன், ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் நடந்தது. ஆனால் திடீரென தற்குறித் தலைவனின் ‘ஜனநாயகன்’ என்ற கேவலமான படம் ரிலீசாகப் போகுது என்ற அறிவிப்பால், ‘டார்க் ஹெவன்’ உட்பட பல படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் பல தயாரிப்பாளர்கள் வயிறெறிந்தனர். அவர்களின் வயிற்றெரிச்சல், படம் ரிலீசான மறுநாளே ‘ஜனநாயகன்’ சவக்குழிக்குள் போனது.
அதன் பின் சில பெரிய கம்பெனிகள், நடிகர்களின் படங்கள் ரிலீசானதால், ‘டார்க் ஹெவனுக்கு’ பல தடங்கல்கள் வந்தன. இப்போது எல்லா தடங்கல்களும் நீங்கி, வரும் 18-ஆம் தேதி படம் ரிலீசாவதால், நிம்மதிப் பெருமூச்சுவிட்ட தயாரிப்பாளர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் கடந்த 12-ஆம் தேதி நடத்தினார்.
இதில் டைரக்டர் பாலாஜி, ஹீரோ சித்து, ஹீரோன் தர்ஷிகா, முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் ரித்விகா, மியூசிக் டைரக்டர் சக்தி பாலாஜி, கேமராமேன் பி.கே.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயற்கை எழில் கொஞ்சும் லொக்கேஷன்களில் க்ரைம் த்ரில்லர் படங்களை எடுப்பது சவாலானது. இயற்கை எழிலும் மர்மமும் இருக்கும் இடங்களைத் தேடித் தேடி படப்பிடிப்பு நடத்தினோம். இதற்காக டைரக்டர் ரொம்பவே அக்கறை எடுத்தார். வாகனங்கள் போக முடியாத இடத்திற்கு ஷூட்டிங் கருவிகளை தோளில் சுமந்து சென்று ஷூட்டிங்கை முடித்தோம்” என்றார் கேமராமேன் மணிகண்டன்.
“க்ரைம் த்ரில்லர் ஜானரில் இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றனர் நடிகைகள் தர்ஷிகாவும் ரித்விகாவும்.
“ஒரு படத்தை பாதிக்கு மேல் எடுத்து முடித்து, அதை அப்படியே தூக்கிப்போட்டுவிட்டு, மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது அவ்வளவு சுலபமல்ல. அப்படித்தான் இந்தப் படம் முடிந்துள்ளது. மீடியாக்களையும் மக்களையும் நம்பி செப்டம்பர் 18-ஆம் தேதி வருகிறோம். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார் டைரக்டர் பாலாஜி.
இதையே வலியுறுத்திப் பேசினார் ஹீரோ சித்து.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.