தற்காலிக/ஒப்பந்த செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க…
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமம் (NHM-TN) மூலம் 4,724 தற்காலிக/ஒப்பந்த செவிலியர் (Staff Nurse) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன – மாதம் ₹21,000 ஊதியம் – GNM அல்லது B.Sc. Nursing கல்வித்தகுதியுடன் 50 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு இன்றி SSLC, +2, Nursing கல்வி மதிப்பெண்கள் மற்றும் சிறப்பு முன்னுரிமை மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு – விண்ணப்பிக்கும் மாவட்டத்தின் உள்ளூர்வாசிகளுக்கு 25 சிறப்பு மதிப்பெண்கள் – திருநங்கையர், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகளுக்கு 5 சிறப்பு மதிப்பெண்கள் – ஒரே நபர் அதிகபட்சம் 3 மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாநகராட்சிக்கு City Health Society மூலமும், பிற மாவட்டங்களுக்கு District Health Society மூலமும் விண்ணப்பங்கள் பெறப்படும் – செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தற்போதைக்கு விலக்கு – இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக/ஒப்பந்த அடிப்படையிலானவை; எந்தக் காரணத்தைக் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
விண்ணப்பிக்க கடைசி நாள் 25.09.2026 மாலை 5.00 மணி அரசாணை: G.O.(Ms) No.258, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் (EAP II-2) துறை, நாள்: 11.09.2026 தேசிய நலவாழ்வு குழுமம் – தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறை ஆணை: R.C. No. 11012724/A4/NHM/2025, நாள்: 11.09.2026





Comments are closed, but trackbacks and pingbacks are open.