திருச்சி 27-வது வார்டில் பகுதி சபா கூட்டம்: பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான  (15.09.2026) திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள  வார்டுகளில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 5  வது மண்டலத்துக்குட்பட்ட 27  வது வார்டு  ரங்கநாதபுரம்  பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில்  மேயர் மு.அன்பழகன்  தலைமை வகித்து , பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார் .

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பகுதி சபா கூட்டம் முன்னதாக மேயர் மு. அன்பழகன் அவர்கள் 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர்,  மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள்,  உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.