பிழைக்க வந்த இடத்தில் … இது தேவையா?
Canada-வில் இந்தப் பெண்மணி பக்கத்து வீட்டுக்காரர் Beef சமைத்ததைக் கண்டித்து சண்டைப் போட்டிருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த புகாரில் கைது செய்யப்படுகிறார். இப்படி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அகதியாக வந்த ஈழத்தமிழர்களை வாழ வைத்த நாடு Canada. ஆனால், சமீபக்காலமாக Canada-வில் இருப்பவர்கள் இந்தியர்கள் மீது வெறுப்பு காட்டுவது இதுப்போன்ற சம்பவங்கள்தான். பிழைக்க வந்த இடத்தில் பணம் சம்பாதித்தோமா, இந்தியாவில் இடத்தை வாங்கி வீடுக்கட்டி நன்றாக வாழ்ந்தோமா என்று இருக்க வேண்டும். அவர்கள் நாட்டில் சென்று உங்களுக்காக அவர்களை மாற்ற நினைப்பது எந்த வகையில் நியாயம்?
சமீபக்காலமாக Canada-வில் இருப்பவர்கள் இந்தியர்களின் இதுப்போன்ற செய்கையால், என் சொந்த நாட்டில் நான் அந்நியனாக உணர்கிறேன் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இது வேலைக்காக Canada-வில் வாழ்பவர்களுக்கு ஆபத்தாக மாறுகிறது.
எங்கு இருக்கிறோமோ அந்த இடத்திற்கு தகுந்தமாதிரி வாழ கற்றுகொள்ள வேண்டும். நாமும் வாழ வேண்டும். அடுத்தவர்களும் வாழ வழிவிட வேண்டும்.
— குகன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.