திராவிட விருது பெற்ற மிசா தி.சாக்ரடீஸ் !
மல்லை சத்யா தலைமையிலான திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் செப்-15 அன்று திருச்சியில் தந்தை பெரியார் 148-ஆவது பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா 118-ஆவது பிறந்தநாள் மற்றும் திராவிட ரத்னா விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், திருச்சியை சேர்ந்த மிசா தி.சாக்ரடீஸூக்கு திராவிட ரத்னா விருது வழங்கப்பட்டது. விருதை பேராசிரியர் அப்துல் காதர் வழங்கினார். இவர் உட்பட, அயல்நாடுகளைச் சார்ந்த 4 பேருக்கும், பெங்களூருவைச் சார்ந்த 2 பேருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த 2 பேருக்கும் என 9 பேருக்கு திராவிட ரத்னா விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்திய ஒன்றிய அரசு பாரத ரத்னா என்னும் மிக உரிய விருதை வழங்கி வருகின்றது. பாரதம் என்ற சொல் பெரியார் மற்றும் அண்ணா வழியில் நடைபோடும் நமக்கு உகந்தது அல்ல. அதனால்தான் திவெக திராவிட ரத்னா என்ற விருதைக் கடந்த 2 ஆண்டு காலமாக வழங்கி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
– ஆதவன்





Comments are closed, but trackbacks and pingbacks are open.