நாகப்பட்டினம் மாவட்டம் என்றாலே மத நல்லிணக்கம் தான் அதிலும் நாகூர் தர்கா என்றாலே சம்திங் ஸ்பெஷல் தான். (13-9-2026) நாகூர் தர்காவில் இந்து சகோதரருடைய திருமண நிகழ்வு குடும்பத்தினர்கள் நண்பர்கள் படை சூழ, சுப முகூர்த்த நேரத்தில், இஸ்லாமிய பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
நாகூர் தர்காவில் மட்டும் இன்று மூன்று இந்து சகோதரர்கள் குடும்பத்தில் காது குத்து நிகழ்ச்சியும், ஒரு திருமண வைபவமும் நடைபெற்றது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் அதாவது காலை 10.30 மணிக்கு இரு நிக்காஹ்ம் மஜ்லிஸும் நடைபெற இருக்கிறது.
இது நாகூர் தர்காவில் நடக்கும் ரெகுலரான நிகழ்ச்சிகள் என்றாலும் இந்த காலகட்டத்தில் எத்தகைய வீடியோக்கள் பகிர்ந்து ” இதுதாங்க நாங்க” என்று சொல்லும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் அடுத்த தலைமுறைக்கு இதனை எத்தி வைக்கும் கடமைக்கும் ஆளாகியுள்ளோம்.
இத்தகைய ஒற்றுமை நம்மிடையே இருக்கும் வரை நம் பிரிவில் குளிர் காய நினைக்கும் யாவருக்கும் இடமில்லை.
கலிபா சாஹிப்
(நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் மற்றும் ஆலோசனை குழு தலைவர்)






Comments are closed, but trackbacks and pingbacks are open.