ஆய்வுக்கட்டுரைகளின் அவசியமும் மீள்வாசிப்பின் தேவையும் !
ஈரோடு, வேளாளர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை (அரசு உதவி பெறும் பிரிவு மற்றும் சுயநிதிப் பிரிவு), காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மற்றும் இயற்கை பன்னாட்டு ஆய்விதழ் ஆகியவை இணைந்து 11.09.2026 மற்றும் 12.09.2026 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ் ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதின் படிநிலைகள் என்னும் பொருண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் தொடக்க விழா 11.09.2026 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆய்வுச் சிக்கலைக் கண்டறிதல், ஆய்வுக்கட்டுரை எழுதுதல், இணையவழி ஆய்விதழ்களில் வெளியிடுதல் மற்றும் ஆய்வுத் தரவுத்தளங்களைப் பயன்படுத்துதல் தொடர்பான பயனுள்ள கருத்துகள் வழங்கப்பட்டன.
வேளாளர் மகளிர் கல்லூரியின் செயலர் செ.து. சந்திரசேகர் தலைமை உரையாற்றினார். முதல்வர் முனைவர் ர. பார்வதி வாழ்த்துரை வழங்கினார்.
முதல் அமர்வில் திண்டுக்கல், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சி.சிதம்பரம் இணைய இதழ்களில் ஆய்வுக்கட்டுரை எழுதுவதின் அடிப்படைகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
இரண்டாம் அமர்வில் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ், முதன்மை ஆசிரியர், முனைவர் ர. சுரேஷ் ஆய்வுச் சிக்கலைக் கண்டறிவதில் மீள் வாசிப்பின் தேவை என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
மூன்றாம் அமர்வில் இயற்கை பன்னாட்டு ஆய்விதழ் முதன்மை ஆசிரியர் முதுமுனைவர் மா. மணிகண்டன் ஆய்வுக்கட்டுரைகளை இணைய வெளியில் பரப்பும் நெறிமுறைகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
இரண்டாம் நாள் முதல் அமர்வில் இனம் பன்னாட்டு மின் தமிழ் ஆய்விதழ் ஆசிரியர் முனைவர் த. சத்தியராஜ் பன்னாட்டுத் தரநிலை இணைய இதழ்களுக்கு ஏற்ப ஆய்வுக்கட்டுரைகளின் நெறிமுறைகள் என்ற தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் இயற்கை பன்னாட்டு ஆய்விதழ் முதன்மை ஆசிரியர் முதுமுனைவர் மா.மணிகண்டன் அவர்கள் தமிழ் ஆய்வுத் தரவுத் தளங்கள் – Web of Science, ORCID, Google Scholar, ResearchGate, Publons, DOI, Cite Factor, ISSN, LinkedIn, CC, Hcommons, OpenAIRE, Citation, h-index” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஈரோடு, நந்தா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கணினித் தொழில் நுட்பத்துறைத் தலைவர் முனைவர் மு. விஜயகுமார் தமிழ்ப் பேராசிரியர்களுக்கான தேசிய ஆய்வு நிதி வாய்ப்புகள் என்னும் தலைப்பில் நிறைவு விழாப் பேருரை ஆற்றினார்.
பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஆய்வு தலைப்பைத் தேர்ந்தெடுத்தல், ஆய்வுச் சிக்கலை கண்டறிதல், ஆய்வுக்கட்டுரையைத் தரமான முறையில் உருவாக்கி, இணையவழி ஆய்விதழ்களில் வெளியிடுதல், ஆய்வுத் தரவுத்தளங்களைப் பயன்படுத்துதல் வரையிலான பல்வேறு ஆய்வியல் நுட்பங்களை அறிந்துகொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இப்ப பயிற்சியில் 50 பேராசிரியர்களும் 40 ஆய்வாளர்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
– அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.