குடமுழுக்கு விழா குளறுபடிகள் – தலைமை நீதிபதி அவமதிக்கப்பட்டாரா ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் நிர்வாகக் குறைபாடுகள் – நீதித்துறையின் கண்ணியத்தைக் காக்க சுயாதீன விசாரணை தேவை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி காத்திருந்தபோது, அவரைப் பற்றி அமைச்சர் ஒருவர் “தலைமை நீதிபதியாக இருந்தால் என்ன?” என அலட்சியமாகக் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தி உண்மையெனில், அது நீதித்துறையின் கண்ணியத்தையும் அரசமைப்புச் சட்டம் உறுதி செய்யும் நீதித்துறையின் மரியாதையையும் பாதிக்கும் வகையிலானது. எனவே, தமிழக அரசும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இதுகுறித்து உடனடியாகத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

மேலும், குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு உரிய இடம் வழங்கப்பட்டதா, தமிழில் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டனவா, நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டனவா என்பதையும் அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற, சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்கள், மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள், மற்றும் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர், வேள்விச் சாலையில், குடமுலுக்கில் தமிழுக்கு உரிய இடம் ஒதுக்கவில்லை, இதைக் கேட்டதற்கு காவல்துறை தன்னை அவமதித்ததாக வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். தந்தை பெரியார் வழியில் நடப்பதாக சொல்லும் இந்த அரசு, குறிப்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷும், மதுரை அமைச்சர் நிர்மல் குமாரும், குடமுழுக்கு தமிழிலும் நடைபெறும் என்று சொல்லி ஏமாற்றி இருப்பது ஏன் என்பதற்கு முதல்வர் விஜய் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

விழாவில் VVIP, VIP அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்ட விதம், அவற்றுக்காக வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் தொகை, பொதுமக்களுக்கு ஏற்பட்ட கட்டுப்பாடுகள், நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் ஆகியவை தொடர்பாகவும் அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட நபர்களுக்கும் குடும்பங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்பாக தவெக அரசு, கோயில் வழிபாட்டில் பாகுபாடு இருக்காது என்று சொல்லிவிட்டு, இன்று அதற்கு நேர் எதிராக அமைச்சர்களும், அவர்களது உறவினர்களும் அதிகாரிகளும், குடமுழுக்கு நிகழ்வை ஆக்கிரமித்துக் கொண்டு, மக்களை அனுமதிக்காமல் அலைக்கழித்து, குடமுழுக்கு புனித கலச நீர், மக்கள் மீது செழிக்கப்படாமல் அவமரியாதை செய்திருப்பது, குடமுழுக்கு நோக்கத்தையே சீர்குலைத்து விட்டது.

கோயில் நிர்வாகத்தின் நோக்கம் பக்தர்களின் நலனையும் கோயில் பாதுகாப்பையும், இறைவன் அருளைப் பெரும் நம்பிக்கையையும்,  உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

ஆனால்,குடமுழுக்கில் பயன்படுத்தப்பட்ட புனித நீர், வெறும் தண்ணீர் எனவும் காவல்துறை வாளியில் ஊற்றி, பக்தர்கள் மீது தெளித்தது திட்டமிட்ட ஏமாற்றம் செயல் எனவும் மக்கள் நேரடியாக தெரிவித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன.   அவை உண்மையா என்பதை அரசு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். புனித நீருக்கு பதிலாக, வேற நீர் தெளிக்கப்பட்டது உண்மையானால் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் ராஜினாமா செய்ய வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்களின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடனும், சட்ட விதிகளின்படியும், அறங்காவலர் குழுவின் உரிய ஆலோசனையுடனும் நடைபெற வேண்டும். அறங்காவலர் குழுவை புறக்கணித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் விசாரிக்கப்பட வேண்டும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு அரசியல் விளக்கங்களை விட ஆவணங்களுடன் கூடிய வெளிப்படையான பதில்களே தேவை. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் பார்ப்பனர் என்பதால், பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட சங்கு பரிவார அமைப்புகள் வாயை திறக்காமல் உள்ளன.

வா.ரங்கநாதன்,
வா.ரங்கநாதன்,

எனவே, எங்களது கோரிக்கைகள்:

  1. தலைமை நீதிபதி தொடர்பாக வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து குறித்து அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.
  2. குடமுழுக்கு விழாவின் நிர்வாக ஏற்பாடுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.
  3. VVIP/VIP அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்ட விதம் மற்றும் வசூலிக்கப்பட்ட தொகை குறித்த முழு விவரங்களையும் வெளியிட வேண்டும்.
  4. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்.
  5. தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவுகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
  6. அறங்காவலர் குழுவின் ஆலோசனை பெறப்பட்டதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
  7. பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
  8. புனித நீர் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து உண்மை நிலையை அரசு வெளிப்படுத்த வேண்டும்.
  9. விசாரணையில் தவறுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதித்துறையின் கண்ணியம், பக்தர்களின் உரிமை, தமிழின் வழிபாட்டு உரிமை மற்றும் கோயில் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.

சட்டத்தின் ஆட்சியும், ஆலயங்களில் சமத்துவமும் நிலைநாட்டப்பட வேண்டும் எனக் கோருகிறோம்.

வா.ரங்கநாதன், தலைவர்,

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.