“இனிமே சார்னு கூப்பிடாதே”– யாரிடம் சொன்னார் சூர்யா!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) – ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தை தமிழ்நாட்டில்  சக்தி பிலிம் பேக்டரி  சக்திவேலன் வெளியிடுகிறார். படத்தினை விளம்பரப்படுத்தும்   பிரத்யேக நிகழ்வு சென்னையில் செப்டம்பர் 27– ஆம் தேதி இரவு நடந்தது. இந்நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா,  ஃபஹத் பாசில், பேபி சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய படக்குழுவினருடன்  நம்ம சூர்யா,  தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்..

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்நிகழ்வில் விநியோகஸ்தர் சக்திவேலனும் ஐசரி கணேஷும் சுருக்கமாக பேசினார்கள். அதன் பிறகு…

தயாரிப்பாளர் எஸ்.எஸ்.  கார்த்திகேயா

“எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் படம் இது .இந்தப் படம்  இனிமையான படம். எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் என்றால்.. இந்தப் படத்தின் பட்ஜெட்டை விட, அவருடைய படங்களில் உள்ளதைப் போன்ற எமோஷனை சொல்லும் படம் என்று குறிப்பிடலாம். அது உங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். இப்படத்தின் இரண்டாம் பாதியில் வரும் எமோஷனல் உங்கள் அனைவரையும் கவரும்”.

 எடிட்டர் பிரவீண் ஆண்டனி

“திரைக்கதையில் எழுதப்பட்டிருப்பதை 60 சதவீதம் காட்சிகளாக உருவாக்கினால் அதுவே படத்திற்கு மிகப்பெரிய வெற்றி என்பார்கள். ஆனால் இந்த படம் என்னை பொறுத்தவரை 200 சதவீதம் நேர்த்தியாக உழைத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இயக்குநரின் பார்வை… ஒளிப்பதிவாளரின் பார்வை… அதனுடன் ஃபஹத் பாசிலின் பங்களிப்பு.. ஆகியவை இருப்பதால் மிகச் சிறப்பானதாக இருக்கிறது”.

 பேபி சாரா

“இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் ஃபேண்டஸியான மேஜிக்கல் உலகத்திற்கு ரசிகர்களை வரவேற்கிறோம். இந்த படத்தில் சாகசமும் இருக்கிறது”.

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி

“ஒரு முறை என்னிடம் மிகப் பெரிய கட்டிடக் கலை நிபுணர் சொன்னார்… நம்முடைய நகத்தின் மேல் ஒரு கட்டிடத்தின் அவுட்லைனை வரைய முடிந்தால்.. அதுதான் மிகச் சிறந்த கட்டிடம் என்றார். இது என்னைப் பொறுத்தவரை சினிமாவிற்கும் பொருந்தும். இரண்டரை மணி நேர படத்தை இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட கதையாக சொல்லப்பட வேண்டும். அதுதான் சிறந்த படம். இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் ஷஷாங்கிடம் சொன்னேன்.

இயக்குநர் கதை சொல்வதற்காக என்னை சந்தித்தார். அப்போது அவர் எனக்கு மூன்று மணி நேரத்தைத் தாருங்கள். இப்படத்தின் கதையை சொல்கிறேன் என்றார். அவரிடம் நிச்சயமாக மூன்று மணி நேரத்தை ஒதுக்க முடியாது. உங்களால் ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை சொல்ல முடியுமா ? என கேட்டேன். அது எப்படி சாத்தியம் ? எனக் கேட்டார். ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை நீங்கள் சொன்னால்…. அது எனக்குப் பிடித்திருந்தால்… நான் இரண்டரை மணி நேர கதையைக் கேட்கிறேன் என்றேன்.‌ அப்போது அவர் யோசித்து எனக்கு ஐந்து நிமிடம் வேண்டாம். ஒரே ஒரு வாக்கியத்திற்குள் இந்தக் கதையை சொல்கிறேன் என்றார்.

எஸ்.எஸ். ராஜமௌலி
எஸ்.எஸ். ராஜமௌலி

‘ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை’ என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த ஒற்றை வாக்கியத்தில், இதில் இருக்கும் எல்லா விசயங்களும் என் மனதில் ஓடியது. அதனால் இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது. அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.

ஃபஹத் பாசில்  ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஜோஷி’,  ‘ட்ரான்ஸ்’, என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் தொடர்ந்து டார்க் ஷேடுள்ள கேரக்டர்களில் எப்படி நடிக்கிறார் என வியப்பாகவே இருக்கும். இந்த படத்திலும் அவர் நடித்திருப்பது சிறப்பு. இந்தப் படத்தின் ராஸ்கல் அவர்தான்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்தப்படம்  பாட்டி முதல் பேத்தி வரை குடும்பத்தில் உள்ள அனைருக்குமானது.

இந்தப் படத்தின் தெலுங்கு முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணாவிற்கும், தமிழில் பின்னணி குரல் கொடுத்த ‘உலகநாயகன்’ கமல்ஹாசனுக்கும், மலையாள மொழியில் பின்னணி குரல் கொடுத்த  மோகன்லாலுக்கும் நன்றி”.

ஃபஹத் பாசில்

“இந்த நிகழ்விற்கு சூர்யா  வருகின்றனர் என்று கார்த்திகேயா சொன்னதைக் கேட்டவுடன் எனக்கு இன்னும் மகிழ்ச்சி அதிகமாகியது .ஏனென்றால் சூர்யா எனக்கு அண்ணன் .அவர் இன்று இங்கு வருகை தந்ததற்கும், வாழ்த்துவதற்கும் நன்றி.

நான் இதுவரை இப்படி ஒரு கதையை கேட்டதும் இல்லை, இப்படி ஒரு படத்தை பார்த்ததும் இல்லை. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்ததுமில்லை. இது மிகவும் புதிது.

ஃபஹத் பாசில்
ஃபஹத் பாசில்

என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திய குழந்தை என்றால் அது சாரா தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் என்னிடம் இப்படி பேசலாமே..! என என்னுடைய வசனத்தையும் அவள் சொல்லிக் காட்டுவாள். என்னுடன் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் யாருமில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அற்புதமான சக நடிகை தான் சாரா. நாங்கள் இருவரும் இணைந்து இந்தப் படத்தில் அற்புதமான மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறோம்.இந்தப் படத்தை நீங்கள் குடும்பத்தினருடனும்… நண்பர்களுடனும்… விருப்பத்திற்குரியவர்களுடனும்…. பார்க்கலாம். இந்தப் படம் உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், அந்த அளவிற்கு அழகான அற்புதமான படம்”.

சூர்யா

“எனக்கு தற்போது ஐம்பது வயதாகி விட்டது. ஒவ்வொரு சினிமாவும் புதுப்புது படங்கள்… புதுப்புது முயற்சிகள்… என நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதைப்போலத்தான், நான் இந்தப்படத்தையும் பார்க்கிறேன்.

பகத் என்னை  அண்ணன் என சொல்லிட்டார். அதனால் இனிமே என்னை  சார்னு சொல்லக்கூடாது.  இருவரும் நிறைய பேசியிருக்கிறோம். காலை, மாலை, மதியம், இரவு, நடு இரவு என பல தருணங்களில் பேசியிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் இடையே ஏராளமான பசுமையான நினைவுகள் இருக்கிறது. தற்போது உள்ள நிலைக்காக நாங்கள் எளிதாக வந்துவிடவில்லை. முட்டி உடைந்து.. கால் உடைந்து.. எழுந்து நின்று… அதன் பிறகு இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் இருவரும் மனதார விவாதித்து இருக்கிறோம்.

சூர்யா
சூர்யா

ஒரு இயக்குநருக்கு இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற கற்பனை இருக்கலாம். அதில் ஒரு குழந்தை நட்சத்திரம் நடிக்கிறார் என்றால்… அவர்களை கையாளுவதற்கு இயக்குநருக்கு ஒரு குழந்தைக்கான மனம் வேண்டும்.

நான் என்னுடைய சின்ன வயதில் பார்த்த படங்கள் எல்லாம் இன்றும் பசுமையாக மனதில் இருக்கிறது. இப்போது நாம் ஆறு வயதிற்கு மேற்பட்ட… எட்டு வயதிற்கு மேற்பட்ட… குழந்தைகளுக்கான படங்களை வழங்குவதில்லை. இதற்கெல்லாம் தற்போது நெட்பிளிக்ஸ், அமேசான், வால்ட் டிஸ்னி ஆகியோர் உருவாக்கும் குழந்தைகளுக்கான படங்களை காண்பிக்கிறோம்.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தைகளும் பார்க்கக்கூடிய படங்களை உருவாக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படம் பெரியவர்களுக்கான குழந்தைகள் படம்.‌

எனவே எல்லா வயதினரும் குடும்பத்தினருடன் அக்டோபர் 2ம் தேதி ‘டோன்ட் டிரபுள் தி டிரபுள்’ படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,”

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.