தமிழ் கலை இலக்கிய பேரவையின் “தமிழர் உரிமை முழக்கம்” நூல் வெளியீட்டு விழா

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் “தமிழர் உரிமை முழக்கம்”  நூல் வெளியீட்டு நிகழ்வு 26-09-2026 சனிக்கிழமை மாலை 5-30 மணிக்கு  திருச்சி அருண் ஓட்டல் மேக்ஸி அரங்கத்தில் நடைபெற்றது.

1955, 56 ல் மாநில மறு சீரமைப்பு குறித்த  விவாதத்தில் சட்டமன்ற நாடாளுமன்றத்தில் பங்கேற்று நிகழ்த்திய உரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்நிகழ்விற்கு தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் பொறுப்பாளர்களில் ஒருவரான மு.தியாகராசன் அவர்கள் தலைமையேற்றார்.

நிகழ்வின் தொடக்கத்தில் கொள்கைப் பாடகர்  ஐயா ஈகவரசன் அவர்கள் தமது இனிமையான குரலில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுடைய உணர்ச்சி மிகுந்த பாடல்களை வழங்கினார்.

செல்வி கி. தமிழரசி அவர்கள் வரவேற்புரை வழங்கிட நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

முன்னதாக தாயக விடுதலைக்காக சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணா போராட்டம் இருந்து உயிர் துறந்த திலீபன் அவர்களுடைய நினைவேந்தலுக்கு அரங்கம் அமைதி வணக்கம் செலுத்தியது.

தொடர்ந்து இளையோர் பங்கேற்பில் சிறுமி க.ஜீ. இனியாழ்  ‘மெய்யறம் தந்த வ உ சி’ என்ற தலைப்பிலும் ‘இன்றைய இளையோருக்கான ஊட்டச்சத்து வ உ சி என்னும் தலைப்பில் சிறுமி இனிய நிலா அவர்களும் உரைவீச்சு நிகழ்த்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. நூல் வெளியீட்டு நிகழ்வில் ‘அறம்’ மனநல மருத்துவ மனையின் நிறுவனர் மருத்துவர்  மகேஷ் ராஜகோபால் அவர்கள் நூலை வெளியிட எழுதமிழ் இயக்கத்தினுடைய தலைவர்  தணிக்கையாளர் ஐயா மு குமரசாமி அவர்களும் பேராசிரியர் ம.தமிழ்ச்செல்வி அவர்களும் பொறியாளர் ச.முத்துக்குமாரசாமி அவர்களும், இனிய நந்தவனம் இதழ் ஆசிரியர்  சந்திரசேகர் அவர்களும் திரு  கி.சுப்பிரமணியன் அவர்களும்  மகேஷ் கலியநாதன் அவர்களும் நூலை பெற்றுக் கொண்டார்கள்.

அடுத்து நூல் திறனாய்வு நிகழ்வில் ஜமால் முகமது கல்லூரியினுடைய மேனாள் தமிழியல் துறைப் பேராசிரியர் முனைவர் வ. முகமது யூனுஸ் அவர்கள் திறனாய்வு உரை நிகழ்த்தினார்கள்.

அதனையடுத்து தமிழோசை பதிப்பகத்தினுடைய உரிமையாளர் ஐயா க. விஜயகுமார் அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள்.

நன்றி உரையை தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் ஆ.இராசா அவர்கள் வழங்கிட நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.