எல்ஃபின் : EOW போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு – சிக்கிய ஆவணங்கள் !
எல்ஃபின் : EOW போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு – சிக்கிய ஆவணங்கள் !
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட எல்பின் குழுமம் தொடர்பான மோசடி வழக்கில், பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, மதுரை, தூத்துக்குடி, அரியலூர், கடலூர், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் முக்கிய ஏஜெண்டுகளை குறிவைத்து அதிரடி ரெய்டை நடத்தியிருக்கிறார்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்.
எல்ஃபின் நிறுவனத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பதிவான 17 வழக்குகளையும் ஒன்றிணைத்து விசாரித்துவரும் டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவினரின் இந்த அதிரடியில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்களை பெற்றுள்ள நிலையில், இம்மோசடியின் மதிப்பு 400 கோடிக்கும் மேல் என்கிறார்கள். ஏற்கெனவே, குற்றவாளிகள் ராஜா, ரமேஷ், சுந்தர்ராஜன், திருச்சி ஷாகுல் ஹமீது, முசிறி பாபு, அறிவுமணி, பால்ராஜ் உள்ளிட்டோர்களை கைது செய்தும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இழப்பீட்டை பெற்றுத்தரும் நோக்கில் இன்னும் கூடுதலான சொத்துக்களை அடையாளம் காணவே இந்த அதிரடி என்கிறார்கள்.
போலீசார் வேண்டுகோள் :
விழுப்புரம் ஜெயராதா, பெரம்பலூர் சாவித்ரி, துறையூர் சந்திரசேகர், ஸ்ரீரங்கம் கவிதா, சிவகங்கை ஹேமலதா, மற்றும் எல்ஃபின் மோசடியின் மூல வழக்கான RMWC மோசடியில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த பாண்டிச்செல்வி, நிர்மலா, தனபாக்கியம், சாந்தி உள்ளிட்ட ஏஜெண்டுகளை நம்பி இதுவரை போலீசில் புகாரே கொடுக்காமல் யாரேனும் இருந்தால், தயங்காமல் புகார் கொடுக்க முன்வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
புகார் கொடுக்க அணுக வேண்டிய முகவரி :
பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகம்,
எண் : 10, அப்துல் சலாம் தெரு,
மன்னார்புரம், திருச்சி – 620020.
– அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.