அச்சுறுத்தும் காலநிலை மாற்றம் : களத்தில் இறங்கிய SEVAI !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

காலநிலை மாற்றம் என்பது இனி ஒரு தொலைதூர அச்சுறுத்தல் அல்ல; அது நம் விவசாயிகளின் அன்றாட யதார்த்தமாக மாறிவிட்ட சூழலில், இதனை எதிர்கொள்வதற்கான மாற்றுத்திட்டங்களோடு; மனிதன், இயற்கை மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையை மீட்டெடுப்பதற்கான ஒரு மக்கள் இயக்கமாக, களத்தில் இறங்கியிருக்கிறார்கள் திருச்சி SEVAI குழுவினர்.

SEVAI  அமைப்பின் நிறுவனர் சேவை கோவிந்தராஜூவின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்படும் இத்தகைய சீரிய முயற்சிகளை, OFI, AEM மற்றும் Greening India ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறது SEVAI.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

  1. பழத்தோட்டம்: செழிப்பை விதைத்தல்

தரிசு நிலங்களில் மா, கொய்யா, பலா, எலுமிச்சை மற்றும் மாதுளை போன்ற பெரும் அளவிலான பழமரங்கள் நடும் இயக்கத்தின் மூலம், மரங்கள் நிறைந்த உற்பத்தித் திறன் கொண்ட பழத்தோட்டங்களாக மாற்றி வருகிறார்கள்.

இங்கே நடப்படும் ஒவ்வொரு மரமும் மூன்று விதமான நன்மைகளைத் தருகிறது: இது கார்பனை உறிஞ்சுகிறது, பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுக்கிறது மற்றும் ஏழைக்குடும்பம் ஒன்றுக்கு 30 ஆண்டுகளுக்கு நிலையான வருமானத்தை அளிக்கிறது.

  1. மியாவாக்கி (Miyawaki) அதிசயம்: 10 ஆண்டுகளில் 100 ஆண்டுகால காடு !

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நிலம் பற்றாக்குறையாக உள்ளது. நேரமும் குறைவாகவே உள்ளது. இதற்கான எளிய தீர்வு ஜப்பானிய மியாவாக்கி முறை. 10 மடங்கு வேகமாக வளரக்கூடிய மற்றும் 30 மடங்கு அதிக அடர்த்தி கொண்ட பல அடுக்குகள் கொண்ட காடுகளை உருவாக்குவதன் மூலம், வெறும் 3 ஆண்டுகளில், ஒரு தரிசு நிலப்பகுதி பறவைகள், தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த செழிப்பான ஒரு சிறிய சூழல் மண்டலமாக (mini-ecosystem) மாறுகிறது.

  1. நீரே தெய்வம்: மழை பெய்யும் இடத்திலேயே அதைச் சேமிப்போம் !

மழை எங்கு பெய்கிறதோ அங்கேயே அதைச் சேமிக்க வேண்டும் என்ற நோக்கிலான நீர் மற்றும் மண் பாதுகாப்பு இயக்கம் வழியாக, திருச்சி மாவட்டம் முழுவதும் தடுப்பணைகள், பண்ணைக் குட்டைகள் மற்றும் நீர் ஊடுருவச் செய்யும் குழிகள் (percolation pits) ஆகியவற்றை அமைத்து வருகிறார்கள். அவ்வாறு அமையும் ஒவ்வொரு தடுப்பணையும் வெறும் நீரைச் சேமிப்பது மட்டுமல்ல; அது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது, மண் அரிப்பைத் தடுக்கிறது மற்றும் வறண்டுபோன கிணற்றை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வருகிறது. கிராமங்கள் நீர் விசயத்தில் சுயசார்பு நிலையை அடைகிறது.

  1. பசுமை இல்லங்கள், பசுமை ஆற்றல்: ஏழைகளுக்கு ஆற்றல் வளம் !

நிலையான வளர்ச்சி என்பது அதிக செலவு பிடிக்கும் விஷயமாக இருக்க வேண்டியதில்லை. இது ஏழை மக்களும் வாங்கக்கூடிய விலையில் இருக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள், இயற்கையான குளிர்ச்சி வசதி மற்றும் கூரையில் சூரிய ஆற்றல் தகடுகள் (solar panels) கொண்ட ‘செலவு குறைந்த பசுமை ஊரக வீடுகளை’ (Cost-Effective Rural Green Housing) அமைப்பதில் SEVAI முன்னோடியாகத் திகழ்கிறது. சூரிய ஒளி விளக்குகள், சூரிய ஆற்றல் பம்புகள் மற்றும் உயிரி எரிவாயு (biogas) அலகுகள் மூலம் ‘பசுமை ஆற்றலை’ ஊக்குவிக்கிறது. இதன் மூலம் கழிவுகளைச் செல்வமாகவும், புகை மண்டலமாக இருந்த சமையலறைகளைச் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான இல்லங்களாகவும் மாற்றுகிறது.

—       கோவிந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.