தமிழக சுடுகாடுகளை குறிவைத்த ஈஷா ! முதல் அடியை கொடுத்த திருச்சி !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கடந்த அக்-07 தேதியிட்ட அங்குசம் செய்தி வார இதழில், “தமிழக சுடுகாடுகளை குறிவைக்கும் ஈஷா” என்ற தலைப்பில், திருச்சி ஓயாமெரி சுடுகாட்டை கோவையை சேர்ந்த ஈஷா பவுண்டேஷனுக்கு ஒரு வருட குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் குறித்து விரிவாக பதிவு செய்திருந்தோம்.

குறிப்பாக, 13.12.2021 முதல் 22.06.2026 வரையிலான கால கட்டத்தில் ஓயாமெரி சுடுகாட்டில் பிணங்களை எரித்த வகையில் திருச்சி மாநகராட்சிக்கு வசூலாகியிருந்த ரூபாய் இரண்டு கோடியே ஐம்பத்து ஐந்தாயிரம் (ரூ2,00,55,000.00) ரூபாயில், மாநகராட்சிக்கு ஆன செலவுகள் வெறும் எண்பத்திரண்டு இலட்சத்து ஐம்பத்தெட்டாயிரத்து இருநூற்று பன்னிரண்டு ரூபாய் (ரூ82,58,212.00) போக, எஞ்சிய ஒரு கோடியே பதினேழு லட்சத்து தொண்ணூற்றாறாயிரத்து எழுநூற்று எண்பத்தெட்டு (ரூ1,17,96,788) ரூபாய் திருச்சி மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டிக்கொடுத்த நிலையில், மாமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈஷாவுக்கு சுடுகாட்டை கைமாற்றி விடுவதன் பின்னணி என்ன? என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

திருச்சி ஓயாமரி சுடுகாடுஇந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலாகவே எதிர்த்து குரல் எழுப்பி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் கடந்த அக்-12 அன்று ”ஓயாமரி தகன சுடுகாட்டில் நியாயம் கேட்டு” ஆர்ப்பாட்டத்தை நடத்த முயன்றனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

போராட்டத்திற்கான அனுமதியை மறுத்த காவல்துறையினர், அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் கோ.வெற்றிச்செல்வம், மாமன்ற உறுப்பினர் எஸ்.சுரேஷ், சமூக ஆர்வலர் டி.சத்யராஜ் உள்ளிட்ட போராட்டக்குழுவினரிடம், ஸ்ரீரங்கம் கோட்ட காவல் உதவி ஆணையர், மாநகர நல அலுவலர், தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருச்சி ஓயாமரி சுடுகாடுநிறைவாக, ”திருச்சி ஓயாமரி எரிவாயு தகன மேடை ஈஷா பவுண்டேஷன் என்ற நிறுவனத்திற்கு விடப்பட்டதை எதிர்வரும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வைத்து ஈஷா பவுண்டேஷன் நிறுவனத்திற்கு விடப்பட்ட அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்; அதுவரை திருச்சி ஓயாமரி எரிவாயு தகனமேடை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் என மாவட்ட சுகாதார அலுவலர்” தெரிவித்ததையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.

தேவதானத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற புள்ளி விவரங்களிலிருந்து ஈஷாவின் நோக்கத்தை அம்பலப்படுத்திய அங்குசம் செய்தியின் கட்டுரையும்; மார்க்சிஸ்ட் கட்சியினரின் உறுதியான தொடர் எதிர்ப்பும் ஈஷாவின் பிடியிலிருந்து திருச்சி ஓயாமரி சுடுகாட்டை மீட்டெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சுடுகாடுகள் ஈஷாவின் வசம் உள்ள நிலையில், மேலும் 500 சுடுகாடுகளை கைப்பற்றும் நோக்கத்தில் ஈஷா தரப்பில் தீவிரமாக இயங்கி வந்த நிலையில் முதல் அடியை கொடுத்திருக்கிறது, திருச்சி.

—         அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.