அழிவின் விழிம்பில் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழகத்தின் தனிச்சிறப்பான முன்னெடுப்புகளில் ஒன்று, கூட்டுறவு அங்காடிகள். 1975-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம். தமிழகம் முழுவதும், கூட்டுறவுத்துறையின் கீழ் அந்தந்த மண்டலம், மாவட்ட அளவில் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி, அந்த சங்கங்களின் வாயிலாக மலிவான விலையில் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும்படி செய்த முயற்சி அது. இன்னும் சொல்லப்போனால், இப்போது மக்களிடையே பேஷனாக மாறிவிட்ட சூப்பர் மார்க்கெட்டுகளின் முன்னோடி திட்டம் தமிழக அரசின் கூட்டுறவு அங்காடிகள்.

கால மாற்றத்திற்கு ஏற்ப கூட்டுறவு அங்காடிகள் மேம்படுத்தப்படாமல், புறக்கணிப்புக்கு ஆளாகியிருக்கிறது. சில மாவட்டங்களில் இன்னும் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில்தான், இதற்கும் கடைசி ஆணியை அடிக்கும் விதமாக தற்போதைய த.வெ.க. அரசின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இதுபோன்ற கூட்டுறவு அங்காடிகளில் ஒன்றுதான், தஞ்சையில் இயங்கிவரும் காவேரி சிறப்பு அங்காடி. காய்கறி, மளிகைப் பொருட்கள், மருந்து மாத்திரைகள், ஸ்டேஷனரி பொருட்கள் என சகலமும் இங்கே கிடைக்கும். பத்து ரூபாய்க்குக்கூட மளிகை பொருட்கள் இங்கே கிடைக்கும் என்பதுதான் இதுபோன்ற கூட்டுறவு சிறப்பு அங்காடிகளின் தனித்துவமே. இன்றளவும்கூட, அரசு விடுதிகள், சிறை உள்ளிட்ட அரசு சார்ந்து இயங்கும் துறைகளுக்கு மளிகைப் பொருட்கள் கூட்டுறவு அங்காடிகள் வழியாகவே விநியோகிக்கப்படுகின்றன.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்நிலையில்தான், சமீப காலமாக காவேரி சிறப்பு அங்காடியில் ஸ்டாக் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. வாடிக்கையாளர்கள் நேரில் வந்து எதிர்பார்த்த பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். இதுநாள் வரையில் சிறப்பு அங்காடியின் மேலாளர்களே உள்ளூர் அளவில் கொள்முதல் செய்துவந்த நடைமுறையை மாற்றி, சென்னையிலிருந்து அதுவும் ஆன்லைன் வழியாக மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டுமென்ற த.வெ.க. அரசின் முடிவுதான் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்கிறார்கள்.

வட்டார அளவிலான விவசாயிகள் – வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பாக சுயசார்பு பொருளாதாரத்தை கட்டமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு அங்காடிகளை, அதன் தன்மை மாறாமல் மேம்படுத்துவதற்குப் பதிலாக கார்ப்பரேட் பாணியிலான வியாபார நடைமுறைக்கு மாற்றுவது கூட்டுறவு அங்காடிகளின் ஆன்மாவை சிதைக்கும் செயல் அன்றி வேறென்ன?

—  தஞ்சை க.நடராசன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.