புதிய அரசாவது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமா?
திருச்சியில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தவும், பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்யவும் வலியுறுத்தி மலைக்கோட்டை மாநகர மீட்டர் ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். கடந்த 16 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாததால், பெட்ரோல் விலை உயர்வு, கடன் சுமை மற்றும் போதிய சவாரி இல்லாமை காரணமாக ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
கிலோமீட்டருக்கு குறைந்தபட்சம் 25 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஆட்டோ வாங்க மானியம், ஓட்டுநர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவி, குடியிருப்பு வசதி மற்றும் திருச்சியில் பாலப்பணிகளை விரைந்து முடிக்கவும் அரசை வலியுறுத்தினர். புதிய அரசு தங்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றும் என நம்பிக்கை தெரிவித்தனர்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.