கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் – தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழ்நாட்டில் 187 அரசு கல்லூரிகளில் மொத்தம் 8,741 கௌரவ விரிவுரையாளர்கள் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். மாணவர்களின் வாழ்க்கையை வழிகாட்டும் இவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வரை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றமும் “சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற அரசியலமைப்புக் கோட்பாட்டை உறுதிப்படுத்தி, சம மதிப்புள்ள வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கேரளா, பஞ்சாப், ஹரியானா (ரூ.57,700) போன்ற மாநிலங்கள் இதை நிறைவேற்றி வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் 12 மாதம் வேலை செய்தாலும் 11 மாதங்களுக்கு மட்டுமே மாதம் ரூ.30,000 ஊதியம் வழங்கப்படுகிறது. UGC பரிந்துரைத்த அனைத்து கல்வித் தகுதிகளைப் பெற்றிருந்தும் உரிய அங்கீகாரமும் ஊதியமும் கிடைக்காதது நீதியற்றதாகும்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும், கல்லூரிகளில் பல இடங்களில் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால், கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகள் எடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் மதிப்பெண்களைப் பதிவு செய்தல் மற்றும் அரசு திட்டங்களைப் பயன்படுத்தும் மாணவர்களின் தரவுகளைச் சரிபார்த்தல் உட்பட அனைத்துப் பணிகளையும் செய்கின்றனர். இதற்காக எந்தவிதக் கூடுதல் சம்பளமும் கிடைப்பதில்லை. கல்லூரி முதல்வர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பிலிருந்து அவர்கள் பல நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். இந்த இரட்டிப்புச் சுமையே அவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசு கௌரவ விரிவுரையாளர்களுக்கு UGC வழிகாட்டுதல் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 12 மாதங்களுக்கும் ரூ.50,000 ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள UGC தகுதிபெற்றவர்களுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்க வேண்டும். மேலும், பணிக்காலத்தில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.