நீர்நிலைகளைக் காப்போம்… எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாப்போம்!
4.11.2026 RCT Wings, RCT Tollgate central, RCT Dc Queen’s, RCT Royal சங்கங்கள், உழவன் அறக்கட்டளையுடன் இணைந்து திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை அகற்றி, ஆற்றின் இயற்கைச் சூழலையும் நீர்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் பணியில் Rotary சங்கங்கள் ஈடுபட்டனர்.
ஆறுகள் என்பது வெறும் நீரோட்டம் மட்டுமல்ல; அவை மனிதர்களுக்கும், பறவைகளுக்கும், மீன்களுக்கும் எண்ணற்ற உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்குகின்றன.
நாம் வீசும் ஒரு பிளாஸ்டிக் பை மண்ணையும் நீரையும் மாசுபடுத்துவதோடு, ஆற்றில் வாழும் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வையும் அச்சுறுத்துகிறது.
ஆற்றைத் தூய்மைப்படுத்துவது ஒரு நாள் சேவை மட்டுமல்ல; இயற்கையின் மீது நாம் கொண்டுள்ள பொறுப்பின் அடையாளம்!
இந்தச் சமூகப் பணி மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும். ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்டாமல் பாதுகாக்க முன்வருவோம்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.