திமுக இளைஞரணிக்கு ஐபேக் கொடுத்த அதிரடி டாஸ்க் !
திமுக இளைஞரணிக்கு ஐபேக் கொடுத்த அதிரடி டாஸ்க் !
தேர்தல் நெருங்க நெருங்க, களம் சூடு பிடித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் திமுகவின் சார்பில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஐபேக் நிறுவனம் இளைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுனர்களையும், கட்சியின் முன்னணித் தலைவர்களையும் கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டு பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஐபேக் நிறுவனம் திமுக இளைஞர் அணிக்கு அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. வார்டு வாரியாக சென்று மக்களின் நிறை, குறைகளை கேட்டறிந்து ஒவ்வொரு வார்டு வாரியாக தேர்தல் அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் திமுக இளைஞரணிக்கு ஒவ்வொரு வார்டிலும் யார் பெரும்பான்மை சமூகத்தினர் என்று தயார் செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் சொல்லியிருக்கிறது. கட்சிப் பொறுப்புகளில் யார் யார் அங்கம் வகிக்கின்றனர். யாரை மாற்றினால் சரியாக இருக்கும். என வார்டு வாரியாக கட்சி சம்பந்தப்பட்ட மற்றும் மக்கள் சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த விவரத்தையும் தயார் செய்து சமர்ப்பிக்க இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஐபேக் ஆணையிட்டுள்ளது.
இதனால் இளைய உடன் பிறப்புகள் தகவல்களைத் திரட்டும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார்கள்.
-மெய்யறிவன்