TVK கட்சிக்காரனுக்கே இந்த நிலையா?
தொகுதி பிரச்சினை தொடர்பாக, தொகுதி எம்.எல்.ஏ.வை சந்தித்து முறையிட்ட கொடுமைக்காக, துறையூர் தொகுதி எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னை சந்திக்க வந்த துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவரை கெட்ட வார்த்தைகளில் திட்டி தாக்கிய காட்சிகள் வைரலாகின.
உடனே ஆளை பிடித்து வந்து துறையூர் இன்ஸ்பெக்டர் முன்னிலையில், மிரட்டி மறுப்பு வீடியோ பதிவு செய்து பிரச்சினையை முடிக்க முயற்சித்தனர். மீண்டும் கார்த்திக்குமார் உண்மையை ஊடகங்களிடம் போட்டு உடைக்க, மீண்டும் சிக்கலில் சிக்கிவிட்டார் துணைசபாநாயகர் ரவிசங்கர். இந்த பின்னணியில், கார்த்திக் குமார் த.வெ.க. கட்சியை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் வெளியாகியிருக்கிறது. சொந்தக் கட்சிகாரனுக்கே இந்த நிலைமையா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
— அங்குசம் செய்திப்பிரிவு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.