அடுத்த தலைமுறை எப்படி இருக்கணும் ?
திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், எக்ஸெல் குழுமத்தின் தலைவரும், ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் ஆண்டுதோறும் தீபாவளி திருநாளையொட்டி தொடக்க காலத்தில் தன்னோடு பயணித்த நண்பர்களோடும் ஊடகத்தினர் உள்ளிட்டு சுற்றத்தாரோடு கலந்துரையாடல் நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
2026 ஆம் ஆண்டிற்கான தீபாவளி திருநாள் சந்திப்பில், சமூகப் பொறுப்பு மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலம் குறித்து உருக்கமாகப் பேசியிருக்கிறார், எம்.எம்.எம். முருகானந்தம். எக்ஸெல் நிறுவனத்தின் 21 ஆண்டுகால வளர்ச்சிக்கு, ஆலமரமாய் ஆழ வேரூன்ற ஊழியர்களின் பங்களிப்பே முக்கிய காரணம் என்றவர், குடும்பம், நண்பர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகத்துடன் இணைந்து வாழ்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி என்றார்.
ரோட்டரியுடன் பங்களிப்பில், தமிழகத்தில் 500 டயாலிசிஸ் மையங்கள் அமைத்தல், 500 நீர்நிலைகளைப் புதுப்பித்தல், 3 முதல் 4 லட்சம் பேருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த தலைமுறை சிறப்பாக உருவாகத் தலைவர்கள் மட்டும் நல்லவர்களாக இருந்தால் போதாது. ஒவ்வொருவரும் பேசும் வார்த்தைகளும் எழுதும் கருத்துகளும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். தனது சொந்த மண்ணான திருச்சியுடனான பிணைப்பையும், சமூகப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான உறுதியையும் வெளிப்படுத்தினார்.
122 ஆண்டுகளில் முதல் தமிழர் – அடுத்த தலைமுறைக்கு இவர் சொல்லும் முக்கியமான செய்தி!
வீடியோ : மகா






Comments are closed, but trackbacks and pingbacks are open.