பாவப்பட்ட உத்தரவு ! பரிதவிக்கும் எழுத்தாளர்கள் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

எழுத்தாளர்கள் நலனுக்காக அவர்தம் குடும்பங்களில் வரும் வாரிசுகளுக்கு தலா 2 சீட் மருத்துவ – பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கொடுத்தது கலைஞர் அரசு. பின்னாளில் பல எழுத்தாளர்கள் தன் அரசியல் பின்னணியை வைத்து ஒன்றுக்கு இரண்டாக தம் வாரிகளுக்கு அந்த இட ஒதுக்கீட்டில் சீட் பிடித்துக் கொண்டார்கள். இதை எதிர்த்து – ஊழல் மீது நடவடிக்கை எடுக்கக் கோர்ட்டுக்குப் போனார் ஓர் எழுத்தாளர். அரசு தரப்பு விசாரித்து அறிக்கை கொடுத்தது. அப்போது இருந்தது ஜெ அரசு. அந்தம்மாவுக்கு நடவடிக்கைக்கு சொல்லியா தர வேண்டும்? இந்த எழுத்தாளர் கும்பலுக்குள்ளேயே இத்தனை ஊழல்களா? இவர்கள் எழுதி சமூகத்திற்கு என்ன நல்லது நடந்து விடப் போகிறது? என்ற கோபம் கொண்டாரோ என்னவோ? ஒரே ஒரு உத்தரவில் இந்த எழுத்தாளர்கள் இட ஒதுக்கீடு கோட்டாவையே ரத்து செய்து உத்திரவு பிறப்பித்து விட்டார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

25 ஆண்டுகளாக எழுத்தாளர்கள் பிள்ளைகள் அந்தப் பாவப்பட்ட உத்தரவினால் மருத்துவம் – பொறியியல் படிப்பது கனவாகி விட்டது. இப்போது பெரியார் அறிவுலக ஊழலில் அகல்விளக்குப் பதிப்பகத்தை மட்டும் சுட்டி பலரும் பேசுகிறார்கள். ஆனால், இதன் பின்னணி ஆய்வில் மற்ற பதிப்பகங்கள் – பரிந்துரையாளர்கள் – நூல் தேர்வாளர்கள் ஊழல் கண்டு அதிர்ந்து போய்த்தான் இப்போது மற்ற நூலக ஆர்டர்களை ரத்து செய்துள்ளது விஜய் அரசு என நான் கருதுகிறேன். அசலான எழுத்தாளர்களின் – அந்த எழுத்துக்களை பதிப்பிக்கும் பதிப்பகத்தாரின் சாபத்தை – பாவத்தை இந்த ஊழல் பதிப்பகங்களே சுமக்க வேண்டும் என்பதே என் பார்வை.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

—  கா.சு.வேலாயுதம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.