முத்துலட்சுமி ரெட்டி

சிறார் இலக்கியம்- நூல் அறிமுகம் : 17

முத்துலட்சுமி ரெட்டி

ஆசிரியர் – இரவி கார்த்திகா

வெளியீடு:- பழனியப்பா பிரதர்ஸ்.

தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் எளிய நடையில் விவரிக்கிறது. பெண் உரிமைக்காக போராடியுள்ளார். குறிப்பாக தேவதாசி ஒழிப்புச்சட்டம் கொண்டு வந்ததில் இவரின் பங்கு முக்கியமானது. அடையாறில் இந்தியாவின் இரண்டாவது புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையைத் தொடங்கியவர்.

மேலும், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி, மேலவை துணைத்தலைவர், சென்னை மாநகராட்சியின் துணை மேயர் எனப் பலப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். மருத்துவத்துக்காகப் பத்மபூஷன் விருது பெற்ற முதல் மருத்துவர் இவர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.