யார் தடுத்தால் என்ன? அது அவர் உரிமை!
இன்னும் எத்தனை காலத்திற்கு பெண்ணை வெறும் உடலாகப் பார்ப்பீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு அவள் கற்பிற்கு ஆண்கள் பாதுகாப்பு? தனியாக வாழும் பெண்கள் திருமணமாகாத பெண்களுக்கு தங்களை பாதுகாத்துக் கொள்ளும் திறமையும் துணிவும் கல்வியும் கிடையாதா? பெண்ணியவாதிகளின் மௌனம் மிகக் கேவலமானது/அருவருப்பானது! அனைத்திலும் அரசியலா?

எல்லாப் பெண்களுக்கும் தங்கள் கணவர்களை விட தங்களைப் பிடிக்கும் என எண்ணுவது என்ன மனநோய்? செய்தி உண்மையானதென இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க இத்தனை காலதாமதம் ஏன்? காலம் தாழ்த்தும் அனைவரும் குற்றவாளிகள்தான்! சிங்கப் பெண்கள் படை இந்நேரம் எடுத்த நடவடிக்கைகள்தானே தலைப்புச் செய்தியாய் இருக்க முடியும்!இம் என்றால் சிறைவாசம் ஏன்? என்றால் வனவாசம் என்ற நெருக்கடிகால நிலையை ஏன் அமல் படுத்துகிறார்கள்? எதை மறைக்க? எந்தத் துறையில் இருந்தாலும் அவர்களுக்கும் உரிய மரியாதை தரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் கண்ணியம்மிக்க கௌரவமான படித்து அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு பெண் அதிகாரிக்கு ஏன் பலத்த மௌனம் பரிசாகத் தரப்படுகிறது? தன்னை உயர்த்திக் கொள்ள அவர் தேர்ந்தெடுத்த பணி அவர் உடலால் வந்ததல்ல! அழகால் வந்ததல்ல! அவர் உங்களை மகிழ்விக்க வந்தவர் அல்ல. அறிவு சார் பெண்களுக்கு ஆண்மை வேண்டும். அது அழிப்பதற்கும் பயன்படலாம்! யார் தடுத்தால் என்ன? அது அவர் உரிமை!
Comments are closed, but trackbacks and pingbacks are open.