ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)

சிறார் இலக்கியம் - நூல் அறிமுகம் - 18

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

நூல் விமர்சனம் : 18

ஆழ்கடல் (சூழலும் வாழிடங்களும்)

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

(இளையோர் இலக்கியம்)

ஆசிரியர் – நாராயணி சுப்ரமணியன்

வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விலை:- ரூ 40/-

ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று அங்கு அமைந்திருக்கும் மலைகள், பள்ளத்தாக்குகள், வெந்நீர் ஊற்றுகள் குளிர்க் கசிவுகள், பவள வாழிடங்கள், உப்புநீர்க் குளங்கள் என இதுவரை நாம் அறியாத பல அதிசயங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.

நம்மிடம் நேரில் அவற்றைச் சுட்டிக்காட்டி உரையாடுவதைப் போல் அமைந்த இந்நூலில், இளையோர் மட்டுமின்றி பெரியவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான தகவல்கள் ஏராளம். நீண்ட தூரம் வலசை போகும் திமிங்கிலங்கள், கடல்மலைகளை அடையாளங்களாகப் பயன்படுத்துகின்றனவாம்.

திமிங்கிலத்தின் இறந்த உடல் ஆழ்கடல் பகுதியில் வந்து விழுந்தால் வெறும் உணவுத் துணுக்குகளை மட்டுமே, தின்று உயிர்வாழும் ஆழ்கடல் உயிரிகளுக்கு, அது ஒரு பம்பர் பரிசு விருந்தாம். அவ்வுடலை நான்கு கட்டங்களாகப் பல்வேறு உயிரிகள் தின்று முடிக்க, 50 முதல் 100 ஆண்டுகள் ஆகும் என்பது ஆச்சரியமளிக்கும் உண்மை.

மனிதரின் செயல்பாடுகளால் ஆழ்கடல் உயிரிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து,  பேசும் ஆசிரியர், ஆழ்கடல் உயிரிகள் சூரிய ஒளியே புகாத அதீதமான சூழலில் கூடத் தாக்குப் பிடித்து வாழ்கின்றன என்பதால், பல ஆராய்ச்சிகளுக்கு உதவுகின்றன. எனவே, ஆழ்கடலைப் பாதுகாப்பது நம் கடமை என்ற இந்தியாவசிய வாழ்வியல் பாடத்தை இந்நூல் உணர்த்துகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.