உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பு: 25-வது வார்டில் புதிய எதிர்பார்ப்பு!
2027 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சி 25-வது வார்டில் போட்டியிடுவதற்கு வசதியாக பெண்கள் வார்டாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.
நாகர்கோவில் மாநகராட்சி 25 மற்றும் 27 வது வார்டு பகுதி தவெக, திமுக, அதிமுக, பாஜக, கட்சிகளில் சீட்டு வாங்கி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட பெண்கள், கல்லூரி மாணவிகள் அழகம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விளக்கு பூஜை கமிட்டியினர், பிரதோஷ கமிட்டியினர், மகளிர் சுய உதவிக் குழுவினர் முன்னாள் இன்னாள் கவுன்சிலர்களின் அராஜகத்தை ஒழிக்க மிகுந்த ஆர்வம் காட்டியிருப்பதாக மகளிர் அணி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
25வது வார்டு பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். வாக்காளர்களில் ஆண்களை விட பெண்களை அதிகம் உள்ளனர். வரும் தேர்தலில் தவெக, திமுக, அதிமுக வேட்பாளர்களை இந்த வார்டில் தோற்கடிப்பதே லட்சியம் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
பொன்.ராதாகிருஷ்ணன், மீனாதேவ், எம்.ஆர். காந்தி போன்றவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்குகளை கொட்டிய 25 மற்றும் 27 வது வார்டுகளை பெண்கள் வார்டாக அறிவிப்பதற்கான வேலைகளை பாஜக பின்னணியில் மகளிர் சுய உதவி குழுவினர் செய்து வருவதாக மீனாட்சிபுரம் பகுதியில் பேசப்படுகிறது .





Comments are closed, but trackbacks and pingbacks are open.