பழங்குடி பிள்ளைகளின் ஆசைகள் இனி வெறும் கனாதானா?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கை நடுங்குகிறது.விழிகள் வழிகின்றன. இனம் புரியா பயம் மீண்டும் தொற்றுகிறது. மூன்றரை ஆண்டுகளாக நம் பள்ளிக் குழந்தைகளின் உணவு, தங்கும் இடம், கல்வி இவை சார்ந்து  பள்ளியில் சண்டை செய்யவே இல்லை.

அழவும் இல்லை. ராவெல்லாம் தூங்காமல் யோசித்துக்கொண்டிருக்கவும் இல்லை. மண்டையைப் பிய்த்துக்கொள்ளவும் இல்லை. நம் பிள்ளைகள் சார்ந்து மட்டுமல்ல ,தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் அனைத்து குழந்தைகள் சார்ந்தும்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மூன்றரை ஆண்டுகளாக எந்த வார்டன் சங்கத்தையும் தலைநகரிலுள்ள இயக்குநர் அலுவலகத்தை அவர் நெருங்க விடவில்லை. துறையின் பள்ளிகளில் கடமையைச் சரியாகச் செய்யும் ஆசிரியர்களுக்கு எந்த வகையில் பிரச்சனை வந்தாலும் அவர்களின் அரணாக இருந்தார். தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் டிமிக்கிக் கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் & காப்பாளர்களுக்கு சிம்மசொர்ப்பணமாக இருந்தார். சில வார்டன் சங்கத் தலைவர்களின் அவதூறுகளையும் மிரட்டல்களையும் கடந்து வந்தார். குழந்தைகளின் நிலையிலிருந்தே ஒவ்வொன்றையும் யோசித்தார். தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் தாமதம் என்றாலும் drawing officer ஐக் கடிந்துகொண்டார். சனி,ஞாயிறு என விடுமுறை பாராமல் பள்ளிகளுக்கு ஓடினார். (Residential School என்பதால் அங்கே எப்போதும் பிள்ளைகள் இருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது? இது வார்டன்களுக்குப் பிடிக்குமா?

கடந்த ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிட நலத்துறையில் இருக்கும் விடுதி மற்றும் பள்ளிகளில் ‘பிள்ளைகளுக்கு பயோமெட்ரிக் ‘.இதை வைத்தே வார்டன்கள் Bill போட முடியும் என்று வந்தபோது ஒட்டுமொத்த வார்டன்களும் அப்போதிருந்த secretary லக்ஷ்மி பிரியா IAS, Director. ஆனந்த் இவர்கள் இருவரையும் அந்தப் பதவியிலிருந்து நகர்த்த – விரட்ட அவ்வளவு உழைத்தனர்.

அண்ணாதுரை
அண்ணாதுரை

இந்த பயோமெட்ரிக் attendance ஐ பழங்குடியின நலத்துறை பள்ளிகள்-விடுதிகளில் நடைமுறைப்படுத்த முனைந்தபோது அதே தாக்குதல்கள் Director.அண்ணாதுரை CLS மீதும் தொடர்ந்தது. ஆனால் அன்றைய அரசு அதை நிதானமாகக் கையாண்டு மாற்றத்தை செய்யுங்கள் என அவர்களுடன் இருந்தது. Biometric கொண்டுவரவேண்டும் என்பது 2016இல் அப்போதைய முதல்வர் செல்வி.ஜெ அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பள்ளிகளில் உணவுக்கான மெனு வை சீர்த்திருத்தம் செய்தது, நலத்துறைப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு JEE,NEET,CUET,CLAT போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தியது. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கி,அந்தக் குழந்தைகள் நுழைவுத் தேர்வு எழுதும் வரை உடனிருந்து அவர்களை தேசிய அளவிலான, சர்வதேச அளவிலான கல்லூரிகளில் சேர்த்து விடும்  இவர்கள் மூவரும் உடனிருந்தார்கள்.

இந்த அரசு வந்ததும் , இவர்களிடமும் நாம் வைத்தக் கோரிக்கைகள் இவர்களை இப்படியே சில காலம் விடுங்கள். இந்தத் துறையில் பயிலும் பிள்ளைகள் வயிறார சாப்பிட்டுக்கொள்ளட்டும். ஆசிரியர்களைத் தினமும் பார்த்துக்கொள்ளட்டும். அவர்களின் கற்பித்தலை அவர்கள் பெற்றுக்கொள்ளட்டும். தேசிய அளவிலான கல்லூரிகளில் சென்று படிக்கட்டும் என்றுதான் Chief Minister of Tamil Nadu கேட்டுக்கொண்டோம்.

ஆனால், வந்ததும் லக்ஷ்மி பிரியா IAS  ஐ எடுத்துக்கொண்டார்கள். முந்தினநாள் சாயங்காலத்திலிருந்து Tribal Director Annadurai Sir க்கு மாறுதல் என்ற தகவல் கிடைத்ததிலிருந்து ஒருமாதிரி படபடப்பாக உள்ளது. இனி வார்டன்களின் ராஜ்ஜியம்தான்.

என்னைப் போன்றோருக்கெல்லாம் அவர் யாரை விரட்டி விரட்டி வேலை செய்யவைத்தார் என்பது முக்கியமாக படவில்லை. யாருக்காக வேலை செய்யவைத்தார் என்பதை மட்டுமே யோசித்தோம்.

பழங்குடியினர் இயக்குநர் பதவியில் எப்போதும் I.F.S தகுதி பெற்றோருக்கே வழங்கப்படும். ஆனால், முதன்முறையாக IFS என்பதைப் பின்னொட்டாக இல்லாத ஒருவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டு, அவரின் இந்தப் பணிக்காலம்தான் ‘பழங்குடியின நலத்துறையில் கல்வியின் பொற்காலம் ‘ எனும் நிலையை உருவாக்கியது.

இனி நம் பிள்ளைகள் விடுமுறையில் உங்களை எதிர்பார்க்கமாட்டார்கள். அவர்களுடன் வந்து ஒருநாள் தங்கவேண்டுமென்ற உங்களின் ஆசையும் நம் பிள்ளைகளின் ஆசையும் வெறும் கனாதானா?

மகாலட்சுமி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.