உயர்ந்த இலக்கு உன்னிடம் வேண்டும் !

வானில் பறக்க சிறகுகள் எதற்கு? தொடர் - 01

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

அமெரிக்க நாட்டின் சிறந்த ஜனாதிபதியாகத் திகழ்ந்தவர் ஜான் கென்னடி, ஒவ்வொரு நாளும் சில பார்வையாளர்களை வெள்ளை மாளிகையில் சந்திப்பது அவரது பணிகளில் ஒன்று.

அதுபோல, ஒருநாள் வெள்ளை மாளிகையில் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவரிடம் உன் எதிர்கால இலட்சியம் என்ன? என்று கேட்டார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அதற்கு அந்த மாணவச் சிறுவன் “இன்று நீங்கள் அமர்ந்திருக்கும் இதே மாளிகையில் இதே நாற்காலியில் நான் உட்கார வேண்டும்”. இதுதான் அந்த சிறுவனின் பதில்.

இதை கேட்டதும் கென்னடியின் விழிகள் வியப்பால் விரிந்தன. உனக்கு என் வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பில் கிளிண்டன்
பில் கிளிண்டன்

காலமும் கடந்தது. அதே சிறுவன் அதே இடத்தில் அதே நாற்காலியில் வந்து அமர்ந்தான். அமர்ந்தது வேறுயாருமல்ல. புகழ் பெற்ற “பில்கிளிண்டன்” தான்.

எனதருமை இளைஞனே! வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு இப்படி அப்படி என்று திரும்பாமல் நேராகத் தன் இலட்சியத்தில் சென்று பாய்கிறது. அதைப் போலவே, தீவிர வைராக்கியம் ஒருவனை விரைவில் வெற்றியின் சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்கிறது.

போராடும் தைரியமும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் இருந்தால் சாம்பலில் இருந்து மீண்டும் எழுந்து வரும் பீனிக்ஸ் பறவை போல, யாரும் தோல்வியிலிருந்து மீண்டும் வெற்றியைப் பெற முடியும்.

(தொடரும்)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.